Home ஸ்வீட்ஸ் பஞ்சு போல சாப்டான, ஜூஸியான ரசகுல்லா இனி இப்படி செய்து பாருங்க! ரெம்ப சுலபமாக செய்துவிடலாம்!

பஞ்சு போல சாப்டான, ஜூஸியான ரசகுல்லா இனி இப்படி செய்து பாருங்க! ரெம்ப சுலபமாக செய்துவிடலாம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடித்தமான ஒரு இனிப்புகளில் ஒன்று தான் இந்த ரசகுல்லா. ரசகுல்லாவும், குலோப் ஜாமுனும் பலருடைய ஃபேவரட் ஆக இருக்கும். பால் வைத்தல் செய்யக்கூடிய இந்த ரசகுல்லாவின் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். நாம் பெரும்பாலும் இந்த ரசகுல்லாவை கடைகளில் வாங்கித்தான் ருசித்திருப்போம்.

-விளம்பரம்-

 ஆனால் இந்த ரசகுல்லாவை வீட்டிலேயே கடைகளில் செய்வது போல் நம்மால் செய்ய முடியும். கடைகளில் கிடைக்கின்ற ரசகுல்லாவில் தான் சுவை அதிகம் என்று நினைத்திருப்போம் ஆனால் வீட்டில் செய்யக்கூடிய ரசகுல்லாவிலும் சுவை அருமையாக இருக்கும்.

மிகவும் குறைவான பொருட்களை வைத்து நிறைவான சுவையில் எளிமையாக இதனை நாம் செய்து முடித்து விடலாம். பண்டிகை காலங்களில் நாம் கடைகளில் இருந்து வாங்க கூடிய இந்த ரசகுல்லாவை இனிமேல் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் நாம் செய்து சாப்பிடலாம். வாங்க இந்த அருமையான ரசகுல்லா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

ரசகுல்லா | Rasagulla Recipe In Tamil

ரசகுல்லாவை வீட்டிலேயே கடைகளில் செய்வது போல் நம்மால் செய்ய முடியும். கடைகளில் கிடைக்கின்ற ரசகுல்லாவில்தான் சுவை அதிகம் என்று நினைத்திருப்போம் ஆனால் வீட்டில் செய்யக்கூடிய ரசகுல்லாவிலும்சுவை அருமையாக இருக்கும். பண்டிகை காலங்களில் நாம் கடைகளில் இருந்து வாங்க கூடியஇந்த ரசகுல்லாவை இனிமேல் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் நாம் செய்து சாப்பிடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: rasagulla
Yield: 4
Calories: 247kcal

Equipment

  • 1 அடி கனமான பாத்திரம்
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 லிட்டர் பால்
  • 1/2 லிட்டர் சர்க்கரை
  • 4 ஸ்பூன் மைதா
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/4 டீஸ்பூன் ரோஸ் எசன்ஸ்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்த பிறகு அதில் எலுமிச்சை சாறு ஊற்றி பாலை திரியவைக்க வேண்டும்.
  • பால் நன்றாக தெரிந்த பிறகு அதனை ஆறவைத்து தண்ணீரை ஒரு துணியில் போட்டு நன்றாக வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • திரிந்த பாலை தனியாக எடுத்த அதனுடன் மைதா மாவு சேர்த்து நன்றாக அழுத்தி செய்து கொள்ளவும். இசைந்தமாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி ஒரு தட்டில் மைதா மாவு சேர்த்துஅதன் மேல் வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து அதனுடன் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.
  • சர்க்கரை நன்றாக கரைந்து கொதித்து வந்தவுடன் அதில்  உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது இறக்கி அதனுடன் ரோஸ் எசன்ஸ் சேர்த்தால் சுவையான ரசகுல்லா தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 247kcal | Carbohydrates: 47g | Protein: 32g | Sodium: 32mg | Potassium: 366mg | Fiber: 10.1g | Calcium: 6mg