Home ஸ்வீட்ஸ் தித்திக்கும் சுவையில் முலாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

தித்திக்கும் சுவையில் முலாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால் சப்போட்டா மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது விசேஷ நாட்களோ நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை கேசரி தான்.

-விளம்பரம்-

கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. எல்லோரும் எளிதாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்வீட் என்றால் அது கேசரி தான். வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை பிரபலம். அதுமட்டுமல்ல, வீட்டுக்கு திடீரென விருந்தினர் வந்துவிட்டால் வீட்டில் ரவை, சர்க்கரை, முந்திரி, சிறிது நெய் இருந்துவிட்டால் போதும் சீக்கிரமாக கேசரி செய்துவிடலாம். என்ன தான் இவை செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் சில நேரங்களில் சரியான பக்குவத்தில் இவை பலருக்கும் வருவதில்லை. சிறிது பக்குவம் மாறினாலும் இவை குழைந்து விடும் அல்லது கட்டியாகி விடும்.

ஆனால் இந்த எளிமையான செய்முறை விளக்கத்தை பின்பற்றி செய்தால் சுவையான மற்றும் இனிப்பான சப்போட்டா ரவா கேசரியை சுலபமாக செய்து விடலாம். ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதால் கமகம என்று மணமாக இருக்க கூடிய இந்த முலாம்பழ கேசரியை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

முலாம்பழ கேசரி | Melon Kesari Recipe In Tamil

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால் சப்போட்டா மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது விசேஷ நாட்களோ நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை கேசரி தான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. எல்லோரும் எளிதாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்வீட் என்றால் அது கேசரி தான். வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Melon Kesari
Yield: 4 People
Calories: 92kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 முலாம்பழம்
  • 1 கப் ரவை
  • 2 ஏலக்காய்
  • 1/2 கப் சர்க்கரை
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
  • 10 முந்திரி, திராச்சை

செய்முறை

  • முதலில் முலாம்பழத்தை தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் ரவையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்ததும் சர்க்கரை மற்றும் ரவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.‌
  • பின் அரைத்து வைத்துள்ள முலாம் பழ விழுதை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் கொஞ்சமாக பால் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் நெய் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் மூடி வைக்கவும். பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முலாம் பழ கேசரி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 92kcal | Carbohydrates: 14g | Protein: 8.2g | Fat: 3g | Sodium: 94mg | Potassium: 579mg | Fiber: 6.9g | Sugar: 5.4g | Vitamin A: 33IU | Vitamin C: 82mg | Calcium: 12mg | Iron: 9mg

இதனையும் படியுங்கள் : வீட்டிலயே ப்ரெஷான ஜூஸ் குடிக்க நினைத்தால் சுவையான முலாம் பழ மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!