கோடைக்காலத்தில் பெரும்பாலும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய பழங்களாக மாம்பழமும் தர்பூசணியும், இளநீரும் இருக்கின்றன. அதே சமயத்தில் மிகவும் ஆரோக்கியம் தரும் ஒரு பழமாக முலாம்பழம் உள்ளது. உடலில் உள்ள வெப்பத்தை தணிப்பதில் முலாம் பழம் மிகவும் சிறந்த ஒன்று. இந்த பழத்தை அப்படியே சாப்பிட நன்றாக இருக்காது. அதனை சர்க்கரையில் தொட்டு தான் சாப்பிட முடியும். இல்லையெனில் அதன் கனிந்த பகுதியை எடுத்து, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இது தாகத்தை தீர்க்கும் ஒரு மிகச்சிறந்த பழமாகும். இந்த பழம் பெரும்பாலும் கோடை காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
இந்த பழத்தில் எவ்வளவு சுவை நிரம்பி இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கிய குணமும் நிரம்பியுள்ளது. இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சிறந்த சத்துக்கள் உள்ளன. இதைத் தவிர பொட்டாசியம் மற்றும் மக்னேசியம் தாது நிறைந்துள்ளது. கலோரி அளவு குறைவாகவும் மிகுந்த நீர் சத்து நிரம்பியதாகவும் இருக்கிறது. இந்த பழம் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக எல்லாவற்றையும் முலாம் பழம் என்று தமிழிலும் மஸ்க்மெலான் என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றோம். மேல்தோல் சிறிது அழுத்தமாகவும் அதனுள்ளே மிருதுவான இன்னொரு தோல் போன்ற பகுதியும் காணப்படுகிறது.
பொதுவாக முலாம் பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு குடிப்பது வழக்கம். ஆனால் சுவை மிகுந்த இந்த முலாம் பழங்களை கொண்டு நிறைய வித்தியாசமான ரெசிபிகளையும் செய்யலாம். அந்த வகையில் முலாம்பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. இந்த மில்க் ஷேக் செய்வதற்கு பால், முலாம் பழம் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.
முலாம் பழ மில்க் ஷேக் | Muskmelon Milkshake Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கண்ணாடி டம்ளர்
தேவையான பொருட்கள்
- 1 முலாம் பழம்
- 6 ஐஸ் கட்டிகள்
- 6 பாதாம்
- 6 முந்திரி
- 1/2 கப் சர்க்கரை
- 1 கப் பால்
- 3 ஏலக்காய்
செய்முறை
- முதலில் முலாம் பழத்தை தோல் சீவி, விதைகளை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
- பின் ஒரு ன மிக்ஸி ஜாரில், முலாம்பழத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு மைய அரைக்கவும்.
- அதன்பிறகு பாதாம், முந்திரி, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி அதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து அதன்மேல் நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் நறுக்கிய முலாம் பழ துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முலாம் பழ மில்க் ஷேக் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!