Home ஸ்வீட்ஸ் வாயில் வச்ச உடனே கரையக்கூடிய உக்காரை ஸ்வீட் செஞ்சு சாப்பிடுங்க!

வாயில் வச்ச உடனே கரையக்கூடிய உக்காரை ஸ்வீட் செஞ்சு சாப்பிடுங்க!

நம்ம வீட்ல விசேஷங்கள் பண்டிகைகள் வந்தா எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி செட்டிநாடு உட்கார பாரம்பரியமான முறையில் செஞ்சு கொடுங்க. பொதுவான வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்தா கேசரி பொங்கல் கல்கண்டு பொங்கல் பாயாசம் இந்த மாதிரியான ஸ்வீட் தான் செய்வோம் ஆனா இதை சாப்பிட்ட சில பேருக்கு போர் அடிச்சி இருக்கும்.

-விளம்பரம்-

அப்படி போர் அடிச்சவங்க எல்லாரும் இனிமேல் உங்க வீட்ல ஏதாவது விசேஷங்கள் பண்டிகைகள் என்று வந்தால் இந்த பாரம்பரியமான செட்டிநாடு உட்கார செஞ்சு அசத்துங்க சாப்பிடுறதுக்கு ரொம்ப வே ருசியா இருக்கும். ஒரு தடவை இதோட டேஸ்ட் எல்லாருக்கும் காட்டிட்டிங்கனா போதும் அதுக்கப்புறம் எல்லாரும் உங்ககிட்ட அடிக்கடி இந்த உக்காரையை செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் நீ நிறைய ஊத்தி பாசிப்பருப்பு தேங்காய் துருவல் எல்லாம் போட்டு அல்வா பதத்துக்கு கிண்டி எடுக்கிற இந்த உக்காரை பாரம்பரியமான ஒரு ஸ்வீட்.

வாயில வச்ச உடனே கரைந்து போகக்கூடிய இந்த ஸ்வீட்ட கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க இதை செய்றதுக்கு குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் ஆனால் டேஸ்ட் ரொம்பவே தரமா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான கறை எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

உக்காரை | Ukkarai Recipe In Tamil

நம்ம வீட்ல விசேஷங்கள் பண்டிகைகள் வந்தா எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி செட்டிநாடு உட்கார பாரம்பரியமான முறையில் செஞ்சு கொடுங்க. பொதுவான வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்தா கேசரி பொங்கல் கல்கண்டு பொங்கல் பாயாசம் இந்த மாதிரியான ஸ்வீட் தான் செய்வோம் ஆனா இதை சாப்பிட்ட சில பேருக்கு போர் அடிச்சி இருக்கும். வாயில வச்ச உடனே கரைந்து போகக்கூடிய இந்த ஸ்வீட்ட கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க இதை செய்றதுக்கு குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் ஆனால் டேஸ்ட் ரொம்பவே தரமா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Ukkarai
Yield: 4
Calories: 219kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிப்பருப்பு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1/2  கப் நெய்
  • 1 கப் வெல்லம்
  • 10 முந்திரி பருப்பு
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • ஒரு கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  • அதனுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • மறுபடியும் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுக்கவும். தேங்காய் நன்றாக வறுபட்டதும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்
  • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கரைய வைத்து வடிகட்டி எடுத்து பாசிப்பருப்பு கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • இறுதியாக நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து அதனுடன் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கினால் சுவையான உக்காரை பாரம்பரியமான முறையில் தயார்.

Nutrition

Serving: 1001 | Calories: 219kcal | Carbohydrates: 19g | Protein: 6g | Sodium: 192mg | Potassium: 271mg | Iron: 1mg

இதனையும் படியுங்கள் : 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த தேன் மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள் நாவில் எச்சி ஊறும்!