ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழங்கள் ரொம்ப பிடிக்கும் அதுல சப்போட்டா பழம் ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது பழத்தையும் நம்ம வேண்டாம் அப்படின்னு ஒதுக்கிட முடியாது ஏன்னா ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு மாதிரியான சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.
அதனால பிடிக்காத பழங்களை எந்த மாதிரியான செஞ்சு கொடுத்தா விரும்பி குடிப்பாங்களோ அதே மாதிரி நம்ம செஞ்சு கொடுக்கணும். அந்த வகையில சப்போட்டா பழம் பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க. இந்த மில்க் ஷேக் செய்ததற்கு மிகவும் குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். ஆனா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா குடிக்கிறதுக்கு ரொம்பவே சூப்பராவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இந்த மில்க் ஷேக் ல பிஸ்தா பருப்பு பாதாம் பருப்பு சேர்க்கிறதால இந்த மில்க் ஷேக் ரொம்ப ரிச்சா குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா இருக்கும். இப்ப இந்த வெயிலுக்கு ஜில்லுனு இந்த மாதிரி குடிக்கும் போது தொண்டைக்கு இதமா சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த செம சூப்பரான வெயிலுக்கு இதமான சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் | Chikku Choco Milk shake
Equipment
- 1 பெரிய பவுள்
- மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 6 சப்போட்டா பழம்
- 2 டேபிள் ஸ்பூன் பொடித்த பாதாம் பிஸ்தா
- 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- 2 டேபிள் ஸ்பூன் உருக்கிய சாக்லேட்
- 1 கப் பால்
செய்முறை
- முதலில் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பை பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்
- கடைகளில் இருந்த டைரி மில்க் சாக்லேட் வாங்கி அதனை உருக்கி எடுத்துக் கொள்ளவும்
- ஒருமிக்ஸி ஜாரில் சப்போட்டாவை கழுவி சேர்த்துக் கொள்ளவும். அதில் சர்க்கரை பால் உருக்கிய சாக்லேட் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து அதனுடன் பொடியாக்கிய முந்திரி மற்றும் பிஸ்தா பரப்பை சேர்த்து பரிமாறினால் சுவையான சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் தயார்
Nutrition
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் முலாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!