குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற முடக்கத்தான் கீரை இடியாப்பம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காலை உணவு என்றாலே இட்லி, தோசை, பூரி, வடை போன்ற உணவுகள் தான் நினைவுக்கு வரும். இவை தவிர புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை என சொல்பவர்களுக்கு இடியாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம். ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்ற

By Prem Kumar · 18/6/2025

காலை உணவு என்றாலே இட்லி, தோசை, பூரி, வடை போன்ற உணவுகள் தான் நினைவுக்கு வரும். இவை தவிர புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை என சொல்பவர்களுக்கு இடியாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம். ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்றுமே ஆரோக்கியமானது. தமிழர்களின் ஒரு பாரம்பரிய காலை உணவு வகைதான் இந்த இடியாப்பம். தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர்.

மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன. ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும். இந்த அற்புதமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள முடக்கத்தான் கீரை இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம். சுத்தமான அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து அவித்தால் இடியாப்பம்!

தேங்காய் பால், பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிட அபாரச் சுவை! மூட்டு வலி மட்டுமல்லாமல், சளி, இருமல், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் முடக்கத்தான் கீரை தீர்வு தருகிறது. முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால், வாத நோய்கள் நீங்கும், உடல் பலமடையும், மலம் இளகும், பசியைத் தூண்டும், கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும். இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தரும் முடக்கத்தான் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். 10 நிமிடத்தில் முடக்கத்தான் கீரை இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம்.

இதனையும் படியுங்கள் : மீந்து போன பழைய சாதம் வச்சு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full