வாய்க்கு ருசியா முடக்கறுத்தான் கீரை துவையல், இப்படி எளிமையான முறையில் செய்து சாப்பிட்டு பாருங்க!

மூட்டு வலி, கால் வலி, உடல் வலி என்பதுதான் இப்பொழுது இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு இயற்கையாக கிடைக்கப்பெற்ற உணவு தான் முடக்கறுத்தான் கீரை. இது என்ன முடக்கறுத்தான் கீரை இது முடக்குவாதத்தை வேரோடு அறுத்து எடுத்து விடும் என்பதால் இதற்

By Prem Kumar · 14/11/2023

மூட்டு வலி, கால் வலி, உடல் வலி என்பதுதான் இப்பொழுது இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு இயற்கையாக கிடைக்கப்பெற்ற உணவு தான் முடக்கறுத்தான் கீரை. இது என்ன முடக்கறுத்தான் கீரை இது முடக்குவாதத்தை வேரோடு அறுத்து எடுத்து விடும் என்பதால் இதற்கு முடக்கறுத்தான் என்று பெயர்.இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவை உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கின்றன.

இந்த முடக்கத்தான் கீரைகள் வாதம், பித்தம், கபம் போன்றவர்களை கட்டுப்படுத்துகின்றன. மேலும் கால் வலி , கை வலி, உடல் வலி இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த முடக்கறுத்தான் கீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவை நல்ல பலனை கொடுகின்றது. முடக்கறுத்தான் கீரை சளி, ஜலதோஷம்,வறட்டு இருமல் போன்றவைகளை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

சளி, இருமல் உள்ளவர்கள் இந்த முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது சளி பிரச்சனை சரியாகி விடுகின்றது. இந்த முடக்கத்தான் கீரையில் லேசான கசப்பு சுவையை உடையது ஆகையால் துவையல் அரைத்து உண்ணும் பொழுது லேசான கசப்பு தன்மை இருக்கும். ஆகையால் துவையலுடன் சேர்க்கக் கூடிய தேங்காய், புளி போன்றவைகள் எல்லாம் முடக்கறுத்தான் கீரையின் கசப்புத் தன்மையை மட்டுப்படுத்தி விடும்.

இப்படி நிறைய நன்மைகளைக் கொண்ட முடக்கறுத்தான் வேலிப்பயிராக கிராமங்களில் வளர்க்கப்படுகின்றது. நகர்ப்புறங்களில் காய்கறி கடைகளில் முடக்கறுத்தான் கீரைகள் கிடைக்கின்றன. இந்த முடக்கறுத்தான் துவையல் அரைத்து சாப்பிடும் பொழுது உடலுக்கு நல்ல பலம் கொடுக்கிறது. ஆகையால் எப்படி இந்த முடக்கறுத்தான் சுத்தம்  துவையல் அரைத்து சாப்பிடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full