வாய்க்கு ருசியா முடக்கறுத்தான் கீரை துவையல், இப்படி எளிமையான முறையில் செய்து சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

மூட்டு வலி, கால் வலி, உடல் வலி என்பதுதான் இப்பொழுது இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு இயற்கையாக கிடைக்கப்பெற்ற உணவு தான் முடக்கறுத்தான் கீரை. இது என்ன முடக்கறுத்தான் கீரை இது முடக்குவாதத்தை வேரோடு அறுத்து எடுத்து விடும் என்பதால் இதற்கு முடக்கறுத்தான் என்று பெயர்.இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவை உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கின்றன.

-விளம்பரம்-

இந்த முடக்கத்தான் கீரைகள் வாதம், பித்தம், கபம் போன்றவர்களை கட்டுப்படுத்துகின்றன. மேலும் கால் வலி , கை வலி, உடல் வலி இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த முடக்கறுத்தான் கீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவை நல்ல பலனை கொடுகின்றது. முடக்கறுத்தான் கீரை சளி, ஜலதோஷம்,வறட்டு இருமல் போன்றவைகளை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

- Advertisement -

சளி, இருமல் உள்ளவர்கள் இந்த முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது சளி பிரச்சனை சரியாகி விடுகின்றது. இந்த முடக்கத்தான் கீரையில் லேசான கசப்பு சுவையை உடையது ஆகையால் துவையல் அரைத்து உண்ணும் பொழுது லேசான கசப்பு தன்மை இருக்கும். ஆகையால் துவையலுடன் சேர்க்கக் கூடிய தேங்காய், புளி போன்றவைகள் எல்லாம் முடக்கறுத்தான் கீரையின் கசப்புத் தன்மையை மட்டுப்படுத்தி விடும்.

இப்படி நிறைய நன்மைகளைக் கொண்ட முடக்கறுத்தான் வேலிப்பயிராக கிராமங்களில் வளர்க்கப்படுகின்றது. நகர்ப்புறங்களில் காய்கறி கடைகளில் முடக்கறுத்தான் கீரைகள் கிடைக்கின்றன. இந்த முடக்கறுத்தான் துவையல் அரைத்து சாப்பிடும் பொழுது உடலுக்கு நல்ல பலம் கொடுக்கிறது. ஆகையால் எப்படி இந்த முடக்கறுத்தான் சுத்தம்  துவையல் அரைத்து சாப்பிடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

முடக்கறுத்தான் துவையல் | Mudakathan Thuvayal In Tamil

முடக்கறுத்தான் கீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவை நல்ல பலனை கொடுகின்றது. முடக்கறுத்தான் கீரை சளி, ஜலதோஷம்,வறட்டு இருமல் போன்றவைகளை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. சளி, இருமல் உள்ளவர்கள் இந்த முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது சளி பிரச்சனை சரியாகி விடுகின்றது. இந்த முடக்கத்தான் கீரையில் லேசான கசப்பு சுவையை உடையது ஆகையால் துவையல் அரைத்து உண்ணும் பொழுது லேசான கசப்பு தன்மை இருக்கும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Mudakatthan Thuvayal
Yield: 4
Calories: 37kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் முடக்கறுத்தான்
  • 6 காய்ந்த மிளகாய்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 10 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 கப் தேங்காய்
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு  தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முடக்கறுத்தான் கீரைகளை நன்றாக சுத்தமாக எடுத்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய் வறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகுஅதே எண்ணெயில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு தேங்காயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் அதிலே புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
     
  • வதக்கிய பொருட்கள் எல்லாம் தனியாக எடுத்து ஆற வைக்கவும். பிறகு சிறிது எண்ணெய் சேர்த்து முடக்கறுத்தான் கீரைகளை எண்ணெயில் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும். கீரைகள் நன்றாக மொறு மொறுவென்று வறுத்த பிறகு அவைகளை எடுத்து ஆற வைக்கவும்.இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
  •  பிறகு வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு , உளுந்து, தேங்காய் இஞ்சி , பூண்டு , முடக்கத்தான் கீரைகளை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்படி அரைத்த எடுத்துள்ள முடக்கறுத்தான் துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அருமையான ருசியில் அபாரமாக முடக்கறுத்தான் கீரை துவையல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 37kcal | Carbohydrates: 4.3g | Protein: 1.3g | Fat: 1.7g | Fiber: 1.5g | Calcium: 60mg | Iron: 1.6mg