Advertisement
சைவம்

ருசியான முருங்கைக்கீரை மோர் இப்படி செய்து பாருங்க!

Advertisement

உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த மோர்குழம்பு மற்ற சில பொருட்களுடன் சேரும் பொழுது மிகுந்த ருசி பெறுகிறது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இந்த மோர் குழம்பை செய்யும் பொழுது முருங்கைக் கீரை சேர்த்து செய்தல் மிகுந்த மனமும் சுவையுடன் இருக்கும். முதல் முறை மோர் குழம்பு சமைப்பவர்கள் இந்த முறையில் காய்கறிகள்

இதையும் படியுங்கள் : உடல் சூட்டை தனிக்கும் பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

எதுவும் சேர்க்காமல் முருங்கைக் கீரை சேர்த்து செய்து பார்த்தால் மோர்க்குழம்பு திரியாமல் அலாதியான மணம் மற்றும் சுவையுடன் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
தேவையான பொருள்கள்

முருங்கைக்கீரை மோர் குழம்பு | Murungaikeerai More Kulambu Recipe in Tamil

Print Recipe
உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த மோர்குழம்பு மற்ற சில பொருட்களுடன் சேரும் பொழுது மிகுந்த ருசி பெறுகிறது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இந்த மோர் குழம்பை செய்யும் பொழுது முருங்கைக் கீரை சேர்த்து செய்தல் மிகுந்த மனமும் சுவையுடன் இருக்கும். முதல் முறை மோர் குழம்பு சமைப்பவர்கள் இந்த முறையில் காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் முருங்கைக் கீரை சேர்த்து செய்து பார்த்தால் மோர்க்குழம்பு திரியாமல் அலாதியான மணம் மற்றும் சுவையுடன் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.
Advertisement
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Murungaikeerai, முருங்கைக்கீரை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 127

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கட்டு முருங்கைக்கீரை
  • 3 Tbsp துவரம் பருப்பு
  • 3 Tbsp கடலை பருப்பு
  • 5 மிளகாய் வற்றல்
  • 25 கிராம் பச்சரிசி
  • 1/2 Tsp மஞ்சள் தூள்
  • 1 Tsp தனியா தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • பெருங்காய தூள் சிறிது
  • 1/2 கப் தயிர்
  • 1 Tsp கடுகு
  • 1 Tsp உளுந்த பருப்பு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் கீரையை ஆய்ந்து தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
  • பிறகு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல், தனியா, தேங்காய்த் துருவல் பெருங்காயம் ஆகியவற்றை தனியாக வறுத்து தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு கீரை நன்றாக வெந்த பின் அதில் அரைத்த மசாலாவைக் சேர்த்து நன்கு கிளறவும். பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து.
  • பின் வேக வைத்த கீரை மற்றும் புளித்த தயிரையும் ஊற்றி நன்றாக கலக்கவும். பின் கீரை மோர்க்குழம்பு நன்றாக கொதித்து வரும் போது, தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும். சுவையான முருங்கைக் கீரை மோர்க்குழம்பு ரெடி.

Nutrition

Serving: 850G | Calories: 127kcal | Protein: 5g | Saturated Fat: 0.5g | Cholesterol: 2mg | Potassium: 427mg | Fiber: 1.5g | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

32 நிமிடங்கள் ago

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

13 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

14 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

14 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

16 மணி நேரங்கள் ago