- Advertisement -
உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த மோர்குழம்பு மற்ற சில பொருட்களுடன் சேரும் பொழுது மிகுந்த ருசி பெறுகிறது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இந்த மோர் குழம்பை செய்யும் பொழுது முருங்கைக் கீரை சேர்த்து செய்தல் மிகுந்த மனமும் சுவையுடன் இருக்கும். முதல் முறை மோர் குழம்பு சமைப்பவர்கள் இந்த முறையில் காய்கறிகள்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : உடல் சூட்டை தனிக்கும் பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி செய்து பாருங்கள்!
- Advertisement -
எதுவும் சேர்க்காமல் முருங்கைக் கீரை சேர்த்து செய்து பார்த்தால் மோர்க்குழம்பு திரியாமல் அலாதியான மணம் மற்றும் சுவையுடன் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
தேவையான பொருள்கள்
முருங்கைக்கீரை மோர் குழம்பு | Murungaikeerai More Kulambu Recipe in Tamil
உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த மோர்குழம்பு மற்ற சில பொருட்களுடன் சேரும் பொழுது மிகுந்த ருசி பெறுகிறது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இந்த மோர் குழம்பை செய்யும் பொழுது முருங்கைக் கீரை சேர்த்து செய்தல் மிகுந்த மனமும் சுவையுடன் இருக்கும். முதல் முறை மோர் குழம்பு சமைப்பவர்கள் இந்த முறையில் காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் முருங்கைக் கீரை சேர்த்து செய்து பார்த்தால் மோர்க்குழம்பு திரியாமல் அலாதியான மணம் மற்றும் சுவையுடன் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.
Yield: 4 People
Calories: 127kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கட்டு முருங்கைக்கீரை
- 3 Tbsp துவரம் பருப்பு
- 3 Tbsp கடலை பருப்பு
- 5 மிளகாய் வற்றல்
- 25 கிராம் பச்சரிசி
- 1/2 Tsp மஞ்சள் தூள்
- 1 Tsp தனியா தூள்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- பெருங்காய தூள் சிறிது
- 1/2 கப் தயிர்
- 1 Tsp கடுகு
- 1 Tsp உளுந்த பருப்பு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் கீரையை ஆய்ந்து தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
- பிறகு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல், தனியா, தேங்காய்த் துருவல் பெருங்காயம் ஆகியவற்றை தனியாக வறுத்து தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு கீரை நன்றாக வெந்த பின் அதில் அரைத்த மசாலாவைக் சேர்த்து நன்கு கிளறவும். பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து.
- பின் வேக வைத்த கீரை மற்றும் புளித்த தயிரையும் ஊற்றி நன்றாக கலக்கவும். பின் கீரை மோர்க்குழம்பு நன்றாக கொதித்து வரும் போது, தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும். சுவையான முருங்கைக் கீரை மோர்க்குழம்பு ரெடி.
Nutrition
Serving: 850G | Calories: 127kcal | Protein: 5g | Saturated Fat: 0.5g | Cholesterol: 2mg | Potassium: 427mg | Fiber: 1.5g | Sugar: 0.5g