ருசியான முருங்கை கீரை பட்டாணி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதுவிதமாக கீரை சாதம்
நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதுவிதமாக கீரை சாதம் செய்து கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் மற்ற உணவுகளை உண்பதை விட கீரைகளை மிகவும் குறைவாகவே உண்கின்றனர்.
அந்த வகையில் கீரைகளை உண்ணாத குழந்தைகளுக்கு இதைப்போல் கீரை சாதம் செய்து கொடுக்கலாம். ஆம், இன்று நாம் முருங்கை கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். முருங்கை கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச்சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் அடங்கியுள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் முருங்கை மரத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதுவரை முருங்கை கீரையை நீங்கள் சட்னியாகவோ, பொரியலாகவோ செய்திருக்கலாம். ஆனால் அடுத்தமுறை முருங்கை கீரையை சாதம் போல் செய்து கொடுங்கள். இந்த முருங்கை கீரை பட்டாணி சாதம் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு ருசியான ராகி முருங்கை கீரை அடை இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!