Home சைவம் ருசியான முருங்கை கீரை பட்டாணி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி...

ருசியான முருங்கை கீரை பட்டாணி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதுவிதமாக கீரை சாதம் செய்து கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் மற்ற உணவுகளை உண்பதை விட கீரைகளை மிகவும் குறைவாகவே உண்கின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் கீரைகளை உண்ணாத குழந்தைகளுக்கு இதைப்போல் கீரை சாதம் செய்து கொடுக்கலாம். ஆம், இன்று நாம் முருங்கை கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். முருங்கை கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச்சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் அடங்கியுள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் முருங்கை மரத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதுவரை முருங்கை கீரையை நீங்கள் சட்னியாகவோ, பொரியலாகவோ செய்திருக்கலாம். ஆனால் அடுத்தமுறை முருங்கை கீரையை சாதம் போல் செய்து கொடுங்கள். இந்த முருங்கை கீரை பட்டாணி சாதம் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும்.

Print
4 from 1 vote

முருங்கை கீரை பட்டாணி சாதம் | Murungai Keerai Pattani Sadam Recipe In Tamil

நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதுவிதமாக கீரை சாதம் செய்து கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் மற்ற உணவுகளை உண்பதை விட கீரைகளை மிகவும் குறைவாகவே உண்கின்றனர். அந்த வகையில் கீரைகளை உண்ணாத குழந்தைகளுக்கு இதைப்போல் கீரை சாதம் செய்து கொடுக்கலாம். ஆம், இன்று நாம் முருங்கை கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதுவரை முருங்கை கீரையை நீங்கள் சட்னியாகவோ, பொரியலாகவோ செய்திருக்கலாம். ஆனால் அடுத்தமுறை முருங்கை கீரையை சாதம் போல் செய்து கொடுங்கள். இந்த முருங்கை கீரை பட்டாணி சாதம் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Murungai Keerai Pattani Sadam
Yield: 3 People
Calories: 30kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் வடித்த சாதம்
  • 1 கப் முருங்கை கீரை
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 5 பல் பூண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 வர ‌மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில் முருங்கை கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி, மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை பட்டாணியை தனியாக குழையாமல் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் கடலை பருப்பு, உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கீரை, வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
  • இத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, இறுதியாக நாம் வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கை கீரை பட்டாணி சாதம் தயார். இதற்கு உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 30kcal | Carbohydrates: 3.63g | Protein: 8.6g | Fat: 2.8g | Sodium: 8mg | Potassium: 55mg | Fiber: 2.9g | Vitamin A: 46IU | Vitamin C: 55mg | Calcium: 99mg | Iron: 2.71mg

இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு ருசியான ராகி முருங்கை கீரை அடை இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!