இந்த 5 ராசிக்கார பெண்கள் தான் வீட்டையும் நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்..!
ஜோதிட ரீதியாக நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நம்மால் கணிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் பன்னிரண்டு ராசிகளின் குணத்தையும் ஆளுமை திறனையும் அவர்களுடைய இன்ப துன்பங்களையும் கணிக்கும் ஜோதிடத்தில் பல மர்மங்களும் இருக்கும். ஆளுமை கணிப்பின்படி ஆண்களுடைய திறனைப் போலவே பெண்களுடைய ஆளுமை த
ஜோதிட ரீதியாக நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நம்மால் கணிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் பன்னிரண்டு ராசிகளின் குணத்தையும் ஆளுமை திறனையும் அவர்களுடைய இன்ப துன்பங்களையும் கணிக்கும் ஜோதிடத்தில் பல மர்மங்களும் இருக்கும். ஆளுமை கணிப்பின்படி ஆண்களுடைய திறனைப் போலவே பெண்களுடைய ஆளுமை திறனையும் கணிக்க முடியும் ஒரு சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த பெண்கள் எங்கு போனாலும் அவர்களை மிகவும் உயரத்தில் தலைமை பண்புகள் இருப்பார்கள். வெளியில் மட்டும் இல்லாமல் வீட்டிலும் அவர்களை ஆளுமை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் அந்த வகையில் வீட்டிலும் நாட்டிலும் ஆளப்பிறந்த ஆளுமை திறன் கொண்ட சில பெண்களுடைய ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசியின் பிறந்த சில பெண்கள் இந்த காலடி எடுத்து வைத்தாலும் இயற்கையாகவே வெற்றியை பெறக்கூடிய திறனை பெற்று இருப்பார்கள். சவால்களை வெல்வதற்கும் புதிய பாதைகளை அமைப்பதற்கும் முன்னோடியாக திகழ்வார்கள். அவர்களுடைய தைரியமான நகர்வு அவர்களை எப்பொழுதுமே வெற்றியை மட்டுமே காண செய்யும்தனித்துவமான குணத்துடன் நிறைய ஆற்றலுடன் அவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களையும் முன்னேற்றுவதில் மிகவும் குறியாக இருப்பார்கள்.
சிம்ம ராசி
இந்த ராசியில் பிறந்த பெண்கள் ஆதிக்கம் நிறைந்த பெண்களாக இருப்பார்கள். வசீகரமான குணத்தின் மூலம் மற்றவர்களை மிகவும் எளிதாக அச்சமின்றி எதிர்கொள்வார்கள். தங்களுடைய மரியாதையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். மொத்தத்தில் இந்த ராசியில் பிறந்த பெண்கள் தன்னம்பிக்கை கவர்ச்சி ஆதிக்கம் என அச்சம் இல்லாமல் நிமிர்ந்து தலைமை பண்போடும் நிற்பார்கள்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் உள்ளுணர்வு உறுதிப்பாடு மற்றும் ஆற்றல் போன்றவையின் கலவையாக எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். விருச்சிக ராசிகள் பிறந்த சில பெண்கள் மர்மமானவர்களாக இருப்பார்கள் மேலும் அவர்களின் மர்மத்திற்கு பின்னால் லட்சியம் வலிமை என வாழ்க்கையில் அவர்களுடைய இலக்கை தொடுவதற்கு இவை மிகவும் உதவியாக இருக்கும். மறைக்கப்பட்ட சில உண்மைகள் சிக்கல்கள் என அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எப்பொழுதும் தொலைநோக்கு பார்வையோடு இருப்பதால் பல வகைகளில் அது அவர்களுக்கு நன்மையை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
மகர ராசி
மகர ராசியில் பிறந்த பெண்கள் வலிமையோடு மன உறுதியோடு எதார்த்தமான அணுகுமுறையோடும் பொறுமையோடும் அனைத்து விஷயங்களையும் கையாளுவார்கள். இவர்களின் ஒழுக்கம் மற்றும் இடைவிடாத முயற்சி அனைத்தும் இவர்களை தலைமை பொறுப்பில் ஏறச் செய்யும். இவர்களுடைய துல்லியமான திட்டமிடல் எதிர்காலத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும்.
கும்ப ராசி
பிறந்த சில பெண்கள் முன்னோக்கு சிந்தனையோடு விஷயங்களை எதிர்கொள்வார்கள். சில கட்டுப்பாடுகளை மீறி அவர்கள் செய்யும் ஒரு சில விஷயங்கள் பலருக்கு நல்ல விதமாக அமையும். அவர்களுடைய நேர்மையான எண்ணங்கள் எப்பொழுதும் அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்லும். பல பெண்களின் முன்மாதிரியாக தனியாக தாகத்தோடும் புரட்சிகர மனப்பான்மையோடும் முன்னேறுவார்கள். பல சவால்களை எதிர்கொண்டு அவர்களோடு சேர்த்து மற்ற பெண்களையும் முன் கொண்டு செல்வார்கள்.
இதனையும் படியுங்கள் : சந்திரகிரகணத்துக்கு பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் ஆறு ராசிக்காரர்கள் இவர்கள் தான்!