இன்று நவராத்திரி துவங்குகிறது பூஜைகள் எப்படி செய்ய வேண்டும் ? எந்த நேரத்தில் செய்ய வேண்டும் ?
நவராத்திரி என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகை. இந்த ஒன்பது நாட்களையும் அம்பிகயை ஒவ்வொரு வடிவில் வழிபடுகிறோம். ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆசாட நவராத்திரி , சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி இந்த நவராத்திரி சாரதா நவராத்திரி ஆ
நவராத்திரி என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகை. இந்த ஒன்பது நாட்களையும் அம்பிகயை ஒவ்வொரு வடிவில் வழிபடுகிறோம். ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆசாட நவராத்திரி , சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி இந்த நவராத்திரி சாரதா நவராத்திரி ஆகும். இந்த நவராத்திரியில் தான் தேவி மகிஷசுரனை வென்று வெற்றி மாலை சூடுகிறார். இந்த பண்டிகையின் சிறப்பு அம்சம் கொலு வைப்பது. வீடுகளிலும் கோவில்களிலும் அழகிய பொம்மைகளை படிகளில் அடுக்கி கொலு வைத்து பூஜை செய்வார்கள். இந்த நவராத்திரி பண்டிகை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
வட இந்தியாவில் இந்த நவராத்திரி பண்டிகை தசரா என்ற பெயரில் தாண்டியா ஆட்டங்களுடன் அமர்களமாக கொண்டாடப்படும். நாம் கொலுப்படிகள் அமைத்து கொலு பொம்மைகளை வைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மங்களப் பொருட்கள் கொடுத்து தாயின் மனதை மகிழ்விக்கிறோம். இந்த நவராத்திரி அம்பிகையை சிறு குழந்தையாக பாவித்து ஒன்பது நாட்களும் ஒவ்வொரு குழந்தை என்ற அம்பிகை அழைத்து பாராயணங்கள் பாடல்கள் பாடி தாயின் மனதை மகிழ்வித்து அவரின் ஆசியை பெறுவார்கள். முதல் மூன்று நாட்களில் தாயை துர்காதேவியாகவும் அடுத்த மூன்று நாட்களில் தாயை லட்சுமி தேவியாகவும் கடைசி மூன்று நாட்களில் தாயை சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகிறோம்.
நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி என்பது தாய் மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து ஒன்பதாவது நாள் வெற்றி பெறுகிறார் பத்தாவது நாள் தாயின் வெற்றியை தேவர்கள் கொண்டாடுகிறார்கள் . இப்படி அம்பிகை மகிஷாசுரடன் எட்டு நாளில் போர் புரிந்து ஒன்பதாவது நாள் வெற்றி பெறுவதை நவராத்திரி தினங்கள் என்று அழைக்கின்றார்கள். இது சாரதா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது பண்டாசுரனை அழித்ததும் இந்த நவராத்திரி தினத்தில் தான் என்று கூறுகிறார்கள்.
நவராத்திரி கொண்டாடும் முறை
நவராத்திரியை கொண்டாடும் வழிமுறைகள் பல இருக்கின்றன. அதில் முதலாவது கொலு வைக்கும் பழக்கம். ஆனால் ஒருமுறை நாம் கொலு வைத்து விட்டோம் என்றால் இறுதிவரை கொலு வைத்து கொண்டாட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கொலு வைத்துக் கொண்டாட வேண்டும். காரணம் ஒரு வருடம் வைத்துவிட்டு அடுத்த வருடம் வைக்காமல் இருக்க கூடாது.
அடுத்து கலச பூஜை முறை தாயை கலசத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும். ஒன்பது நாட்கள் கலசத்தில் உள்ள தாய்க்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருவது.
மூன்றாவது முறை அகண்ட தீபம் ஏற்றி அணையா விளக்காக ஒன்பது நாட்களும் ஏற்றி தாயை தீபத்தில் ஆவாகனம் பண்ணி பூஜை செய்வது.
இவைகளை எல்லாம் செய்ய இயலாதவர்கள் இறுதியாக வீட்டில் உள்ள ஏதோ ஒரு அம்பிகையின் படத்திற்கு அபிராமி, பராசக்தி, மகாலட்சுமி எந்த அம்பிகையின் திருவுருவப்படம் இருக்கிறதோ அதற்கு நமக்கு தெரிந்த ஒரு பாடலை பாராயணம் செய்து பூஜித்து தாயின் அருளைப் பெறலாம்.
கொலு வைக்கும் முறை
கொலு வைப்பதன் சூட்சுமம் என்னவென்றால் இவ்வுலகில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனுக்கு கீழே என்பதை உணர்த்துவதற்காக வைக்கப்படுவது தான். கொலு வைத்து பழக்கம் உள்ளவர்கள் கொலு வைக்கலாம். இது தான் முதல் முறை என்பவர்கள் இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக வைக்க வேண்டும்.
கொலு வைக்கும் முறையில் முதலில் கொலுவை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைக்க வேண்டும். இயலாதவர்கள் சில பொம்மைகளை மட்டுமாவது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து மற்றவைகளை வசதிக்கு ஏற்ப வைத்து கொள்ளலாம்.
கொலுவில் முதலில் எத்தனை படிகள் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும் . 3, 5, 7, 9,11 படிகள் வைக்கலாம். கொலு பொம்மைகளை ஓரறிவு முதல் ஆறறிவு உயிர் வரை அடுக்க வேண்டும்.
முதல் படி மரம், செடி , கொடிகள்.
இரண்டாம் படி கடல் வாழ் உயிரினங்கள்.
மூன்றாம் படி புற்றுகளில் வாழும் உயிரினங்கள்.
நான்காம் படி பூச்சிகள் நண்டு ,வண்டு, வண்ணத்து பூச்சி.
ஐந்தாம் படி பறவைகள் விலங்குகள்.
ஆறாம் படி மனிதர்கள்.
ஏழாம் படி மகான்கள், சித்த புருசர்கள்.
எட்டாம்படி அஷ்ட லஷ்மிகள், தசாவதாரம்.
ஒன்பதாம் படி மும்மூர்த்திகளும், முப்பெரும்தேவியரும் என்று வரிசையில் அடுக்கலாம்.
இப்படி எந்த முறையில் வழிபட்டாலும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் தூப தீப ஆராதனை காட்டி அர்ச்சனை செய்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
வீட்டிற்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு மங்கல பொருட்கள் கொடுக்க வேண்டும். குறைந்தது குங்குமம் கொடுக்க வேண்டும். நவராத்திரி தினத்தில் இல்லத்திற்கு வருபவர் யாராக இருந்தாலும் அவரை அம்பிகையாக பாவித்து அவருக்கு ஏதாவது ஒரு பரிசு பொருளை கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.
இந்த ஆண்டு நவராத்தி எப்போது?
இந்த ஆண்டு க்டோபர் 15 அன்று துவங்குகிறது. பூஜைகள் செய்ய வேண்டிய நேரம் காலை 6.05 மணி முதல் 11.45 மணி வரை பூஜைகள் செய்து கொள்ளலாம். மாலை 6 மணிக்கு மேல் 9 மணி வரை எப்பொழுது வேண்டுமானாலும் பூஜை செய்து கொள்ளலாம். காரணம் இது நவராத்திரி இரவு நேரங்களில் பூஜை செய்வது விசேஷம். பூஜை செய்யும் நேரத்தில் ராகு காலம் , எமகண்டம் இல்லாமல் பார்த்துக் கொண்டு பூஜையை துவங்குவது நல்லது.
ஒன்பது தேவி ரூபங்கள்
முதல் நாளில் அன்னை உமா மகேஸ்வரியாக அருள் புரிகிறாள். இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து தோடி ராகப்பாடல்களை பாடலாம்.
இரண்டாம் நாளன்று கௌமாரி வடிவில் அருள் பாலிக்கும் அம்பிகைக்கு முல்லை அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். இன்றைய தினம் கல்யாணி ராகமே பாடலாம்.
மூன்றாம் நாள் வராகி அன்னையாக காட்சி தருகிறார். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து காம்போதி ராகம் பாடலாம்.
நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் அம்மா. மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும். இவளுக்கு உகந்தது பைரவி ராகம்.
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அம்பிகை. முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் அம்பிகைக்கு பிடித்தமானவை. பந்து வராளி ராகப்பாடல்கள் பாட வேண்டும்.
ஆறாம் நாள் இந்திராணியாக தேவி இருக்கும் தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. அம்மாவுக்கு பிடித்தமானவை நீலாம்பரி ராகமும், தேங்காய் சாதமும்.
ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள் தரும் அம்பிகைக்கு தாழம்பூ , தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து, பிலஹரி ராகம் பா வேண்டும்.
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தரும் அன்னைக்கு பிடித்தமான ரோஜா மலரை சூடி, புன்னக வராளி ராகம் பாடி, சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்யலாம்.
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக இருக்கும் அன்னை. பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அர்ச்சித்து வசந்தா ராகம் பாடலாம்.
இப்படி ஒன்பது நாட்களும் தாயை வழிபட்டு அன்னையின் அருளை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
இதனையும் படியுங்கள் : நவராத்திரியில் வீட்டில் இப்படி கொலு வைத்தால் அம்பிகை வீட்டில் நிரத்தரமாம குடியேறுவாள்!