நவராத்திரியில் வீட்டில் இப்படி கொலு வைத்தால் அம்பிகை வீட்டில் நிரத்தரமாம குடியேறுவாள்!

- Advertisement -

இந்தியாவில் நவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாப்படுகிறது. உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் ஒன்று சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்த நவராத்திரி. இந்த, ஒன்பது நாட்கள் துர்கா தேவியை வழிப்பாடு செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

-விளம்பரம்-

நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுசரிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.

- Advertisement -

நவராத்திரியின் சிறப்பு

வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியே சாரதா நவராத்திரியாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத அமாவாசை நாளில் கொலு படிகள் அமைத்து, கொலு பொம்மைகள் அடுக்கி, பலவிதங்களில் வீடுகளை அலங்கரித்து, அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சமாகும்.

நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது ?

மக்களையும், முனிவர்களையும், தேவர்களையும் ஆட்டிப் படைத்த கொடூர அரக்கன் மகிசாசுரனை போரிட்டு வென்று வதைத்ததன் சிறப்பை எடுத்துக் கூறவும், அன்னை சக்தி தேவியின் சிறப்பையும் வீரத்தையும் பாராட்டும் விதமாகவும் இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

கொலு

நவராத்திரிக்கு கொலு வைப்பதே ஒரு பண்டிகை போல கோலாகலமாக இருக்கும். இப் பண்டிகை பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது. அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொலு வைத்தவர் வீட்டில் ஒருவரையொருவர் சந்தித்து பூஜையறையில் பங்கேற்றுக் கொள்கின்றனர். கொலுவைக் காண வந்தவர்களுக்கு, வசதிக்கேற்றப பரிசுப் பொருட்களை வழங்கி, மஞ்சள், குங்குமம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வழியனுப்பி வைக்கின்றனர்.

-விளம்பரம்-

கொலு வைக்கும் முறை

கொலு வைப்பதற்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்து, ஒற்றைப் படையில் அதாவது, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் வைத்து கொலு வைக்கப்படும். கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட வேண்டும். கொலுவில் மரப்பாச்சி பொம்மை முக்கிய இடம் வகிக்கிறது. இவை சந்தன மரம் அல்லது தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ பொம்மைகளாகும். நவராத்திரி தினத்தில் பூஜையறையில் கலசம் வைத்து, தேவிக்கு தினமும் நைவேத்தியம் படைத்து, பூவினால் அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.

கொலு படிகள்

நவராத்திரியில் குறைந்தது 3 என 11 படிகள் வரை வைக்கும் பழக்கமுண்டு. முதல் படி மரம், செடி, ஆகிய ஓரறிவு உயிரினங்களை குறிக்கிறது. இரண்டாம் படி, ஈரறிவு உயிரனங்களான நத்தை, சங்கையும், மூன்றாம் படி கரையான், எறும்பு போன்ற மூன்றறிவு உயிரினங்களையும், நான்காம் படி நண்டு, வண்டு, உயிரினங்களையும்.ஐந்தாம் படி பறவைகளை குறிக்கிறது. ஆறாம் படிஸமனிதர்கள், திருமணங்கள் மற்றும் ஏழாம் படி உயர்ந்த சித்தர்கள், மகான்களின் பொம்மைகள், எட்டாம் படி இறைவனின் அவதாரங்கள், ஒன்பதாம் படியில் முப்பெரும் தேவியர், மும்மூர்த்திகள், முருகப்பெருமான், பிள்ளையார் பொம்மைகளை வைப்பது வழக்கம்.

நவராத்திரியன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!

-விளம்பரம்-

ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!

ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!

ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!

ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!

ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

இந்த 9 நாட்களும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அன்னையின் அருளைப் பெற்றிடலாம். நவராத்திரியின் போது துர்க்கையின் நாமத்தை கூறி வழிபடுவது சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதனுடன் அவர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதனையும் படியுங்கள் : அக்டோபர்-15 நவராத்திரியில் வீட்டில் கொலு வைக்காதவர்கள் எப்படி வழிபடலாம் ?