அக்டோபர்-15 நவராத்திரியில் வீட்டில் கொலு வைக்காதவர்கள் எப்படி வழிபடலாம் ?

- Advertisement -

கொலு என்பது தென்னிந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி அக்டோபர் 24-ந் தேதி நிறைவடைகிறது. நவராத்திரி கொலு பொம்மைகள் மற்றும் சிலைகள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டு அலங்காரத்தின் சிறப்பம்சமாகும். மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோவில், போன்ற பல கோயில்கள் நவராத்திரி காலத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

-விளம்பரம்-

நவராத்திரி

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை ஆகும். நவராத்திரி நோன்பு புரட்டாசிமாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தி தேவியை குறித்து நோற்கப்படும் நோன்பாகும். மிகிஷாசுரன் என்ற அரக்கனை சரஸ்வதி, லட்சுமி மற்றும் துர்க்கை மூவரும் சேர்த்து வதம் செய்த நாள் தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி மூன்று தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.

- Advertisement -

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.

கொலு படிகள்

நவராத்திரியில் குறைந்தது 3 என 11 படிகள் வரை வைக்கும் பழக்கமுண்டு. முதல் படி மரம், செடி, ஆகிய ஓரறிவு உயிரினங்களை குறிக்கிறது. இரண்டாம் படி, ஈரறிவு உயிரனங்களான நத்தை, சங்கையும், மூன்றாம் படி கரையான், எறும்பு போன்ற மூன்றறிவு உயிரினங்களையும், நான்காம் படி நண்டு, வண்டு, உயிரினங்களையும்.ஐந்தாம் படி பறவைகளை குறிக்கிறது. ஆறாம் படிஸமனிதர்கள், திருமணங்கள் மற்றும் ஏழாம் படி உயர்ந்த சித்தர்கள், மகான்களின் பொம்மைகள், எட்டாம் படி இறைவனின் அவதாரங்கள், ஒன்பதாம் படியில் முப்பெரும் தேவியர், மும்மூர்த்திகள், முருகப்பெருமான், பிள்ளையார் பொம்மைகளை வைப்பது வழக்கம்.

கொலு வைக்காதவர்கள் எப்படி வழிபடலாம்?

நவராத்திரியின் ஒன்பது நாட்களுமே சக்திதேவியின் ஒவ்வொரு அவதாரத்தை வணங்கி வழிபடுகிறோம். லட்சுமி சரஸ்வதி பார்வதி என்று முப்பெரும் தேவியரை கொண்டாடும் பண்டிகையாக இருப்பதால், கொலு வைக்காதவர்கள் அம்பாளை மனதார வேண்டிக் கொண்டு வழிபடலாம். அப்படி வழிபட மூன்று முறைகள் உள்ளன. அதில் ஒன்றாவது அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவது, 2வது கலசம் வைத்து வழிபடுவது, 3வது முறையாக படம் வைத்து வழிபடுவது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை மட்டுமாவது தினமும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்பிகையை வழிபட வேண்டும்.

-விளம்பரம்-

படம் வைத்து வழிபடுதல்

கொலு வைக்காதவர்கள் பூஜையறையில் மூத்தேவியரின் படத்தை வைத்து தினமும் காலையில் மாலையில் விளக்கேற்றி நைவேத்யம் செய்து வைத்து வணங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இனிப்பு வகையை நைவேத்தியமாக வைக்கலாம். அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களை வீட்டுக்கு அழைத்து, உங்களால் இயன்ற அளவுக்கு பூ, குங்குமம் கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம்.

கலசம் வைத்து வழிபடுதல்

கொலு வைக்காதவர்கள் முப்பெரும் தேவியருக்கு கலசம் வைத்து வழிபடலாம். பொதுவாக அனைவரும் கலசம்‌ வைப்பார்கள். ஆனால், நவராத்திரியின் போது நல்ல நேரத்தில் கலசத்தை நிறுவுவதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். இந்த கலவசத்தை மனைப்பலகையில் பச்சரிசி பரப்பி, அதன் மீது வைத்து வழிபட வேண்டும். அப்படி செய்தால் துர்கா தேவி மகிழ்ச்சி அடைந்து , நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவது

மூன்றாவதாக தீபம்‌ ஏற்றி வழிபடுபவர்கள் அகலமாக மண் அகல் விளக்கினை வாங்கி ஊற வைத்து, பின் அதற்கு மஞ்சள், குங்குமம், வைத்து திரி போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். நவராத்திரியின் 9 நாட்களும் அம்பாளின் முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டால் வீட்டில் நிம்மதியும், செல்வ வளமும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : கடன் தீர்ந்து செல்வம் சேர புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடு!