செல்வத்தை கொடுக்கும் நவராத்திரி தீபம்!!
இந்து கலாச்சாரத்தின் படி ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதமான வழிமுறைகளில் வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறைகள் உள்ளது. அப்படி வழிபாடு செய்வதற்குரிய சிறப்பு மிகுந்த நாட்களில் நவராத்திரி நாட்கள் மிகவும் முக்கியமான நாட்களாக திகழ்கிறது. இந்த நவராத்திரி நாட்களில் பெண்கள் அவர்களுடைய வீ
இந்து கலாச்சாரத்தின் படி ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதமான வழிமுறைகளில் வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறைகள் உள்ளது. அப்படி வழிபாடு செய்வதற்குரிய சிறப்பு மிகுந்த நாட்களில் நவராத்திரி நாட்கள் மிகவும் முக்கியமான நாட்களாக திகழ்கிறது. இந்த நவராத்திரி நாட்களில் பெண்கள் அவர்களுடைய வீட்டில் குரு பொம்மைகளை வைத்து கலசம் வைத்து துர்க்கை லட்சுமி சரஸ்வதி போன்ற தெய்வங்களை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. வீட்டிற்கு சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் தருவதை ஒரு சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாட்களில் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
முப்பெரும் தேவிகள் வழிபாடு
துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் தைரியம் தன்னம்பிக்கை இரண்டும் அதிகரிக்கும். சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதன் மூலம் ஞானம் பெற்று கல்வி பெற்று சிறப்பாக விளங்க முடியும். மகாலட்சுமியை வழிபடுவதால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். முப்பெரும் தேவிகளின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் இந்த உலகத்திலேயே நாம் தான் அதிர்ஷ்டசாலி அவர்களுக்குரிய சிறப்பான நவராத்திரி நாட்களில் ஏதாவது ஒரு நாள் மட்டும் இந்த தீப வழிபாட்டை செய்தாலே நிச்சயமாக நல்லது நடக்கும்.
2025 நவராத்திரி
இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி திங்கட்கிழமை ஆரம்பித்து அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வியாழக்கிழமை நிறைவடையும். அனைத்து நாட்களிலும் இந்த தீபத்தை ஏற்றுவது சிறப்பானது. ஆனால் முடியவில்லை என்பவர்கள் ஒரே ஒரு நாள் மட்டுமாவது இந்த தீபத்தை ஏற்றலாம். இதன் மூலம் முப்பெரும் தேவிகளின் அருளை நம்மால் பெற முடியும். எலுமிச்சை தீபம் ஏற்றுவதால் நிச்சயமாக நல்லதே நடக்கும்.
நவராத்திரி விளக்கு
எலுமிச்சை தீபத்தை வீட்டில் ஏற்றக்கூடாது ஆலயத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று கூறுவார்கள் ஆனால் நவராத்திரி நாட்களில் ஆலயத்தில் இருக்கக்கூடிய தெய்வங்களை நாம் வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்வதால் நவராத்திரி நாட்கள் முடிவடைவதற்குள் வீட்டிலேயே எலுமிச்சை தீபத்தை போடுவது சிறப்பானது. எலுமிச்சையை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து விட்டு அந்த எலுமிச்சம் பழத்தோலை திருப்பி போட்டு அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது சிறந்தது. இந்த தீபத்தை சூரியன் அஸ்தமனமான பிறப்பு ஏற்றுவது சிறப்பானது. விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அம்மனின் பாடல்கள் மந்திரங்களை உச்சரிப்பது சிறப்பானது. அரை மணி நேரம் ஆவது இந்த தீபம் எரிய வேண்டும். இந்த தீபத்தை போட்டு வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருளை ஒரு சேர நம்மால் பெற முடியும். பழைய விளக்கு ஏற்றிய எலுமிச்சம் பழங்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய எலுமிச்சம் பழத்தில் தினமும் விளக்கு போட வேண்டும். நிச்சயமாக இந்த வழிபாட்டை செய்தால் வாழ்க்கையில் சிறப்பான பல விஷயங்கள் நடக்கும்.
இதனையும் படியுங்கள் : நவராத்திரியில் கொலு வைத்து வழிபட முடியாதவர்களுக்கான தியான வழிபாடு!!