சிவலிங்கத்திற்கு இந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் சகல விதமான நன்மைகளும் கிடைக்கும்!!

சைவர்களின் முதன்மை தெய்வமான சிவ பெருமானே உலகை படைத்ததாக சொல்லப்படுகிறது. சிவன் அழிக்கும் கடவுள் என்பதால் பலரும் அவரை வழிபடுவது கிடையாது. ஆனால் அவர் தீமைகளை, பாவங்களை அழித்து, பக்தர்களை துன்பங்களில் இருந்து காத்து, முக்தி என்னும் பிறவாத நிலையை தரக் கூடியவர் என்பதை அறிந்தவர்கள் வெக

By ·

சைவர்களின் முதன்மை தெய்வமான சிவ பெருமானே உலகை படைத்ததாக சொல்லப்படுகிறது. சிவன் அழிக்கும் கடவுள் என்பதால் பலரும் அவரை வழிபடுவது கிடையாது. ஆனால் அவர் தீமைகளை, பாவங்களை அழித்து, பக்தர்களை துன்பங்களில் இருந்து காத்து, முக்தி என்னும் பிறவாத நிலையை தரக் கூடியவர் என்பதை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே. சிவ வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் மந்திரங்கள், பூக்கள், விரதம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் இருப்பதை போல சிவ அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சிவ வழிபாட்டிற்கு ஏற்ற சாவன் மாதத்தில் சிவ பெருமானுக்கு நாம் படைக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான பலனை தரக் கூடியதாகும். இந்த மாதத்தில் சிவலிங்கத்திற்கு சில குறிப்பிட்ட பொருட்களை படைத்து வழிபடுவதால் நம்முடைய கனவுகள் அனைத்தும் நனவாகும். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

சாவன் மாதம் என்றால் என்ன?

ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது அதேபோல வடமாநிலங்களில் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில், சாவன் மாதம் என்று சொல்லப்படும் ஷ்ரவண மாதம் சிவபெருமான் வழிபாட்டிற்கு உரியது என்று கருதப்படுகிறது. சாவான் மாதம் என்று சொல்லப்படும் புத்தாண்டின் ஐந்தாவது மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபடுவது சோமவார விரதம் இருப்பது கங்கை நீரால் அபிஷேகம் செய்வது உள்ளிட்டவை விசேஷமானதாகும். இந்த மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து, சிவலிங்கத்தை வழிபடுகிறார்கள். சிவலிங்கத்தை வழிபடுவதால் ஆன்மீக வளர்ச்சி, செல்வம் மற்றும் ஆசைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

அபிஷேக பொருட்களும் அதற்கான பலன்களும்

பஞ்சாமிர்தம்

சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். மனதில் ஒருவித ஒளி உண்டாகும். நம்முடைய செல்வம் மேலும் மேலும் பெருக தொடங்கும். உடலும் உள்ளமும் வலிமை பெறும். எதிரிகளை எதிர் கொள்ள தைரியம் கிட்டும்.

பால்

சிவலிங்கத்திற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வதால் ஆரோக்கியம் கிடைக்கும். உடல் நலமாகும். நோய் நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும். உடல், மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமடையும். மனதிற்கு அமைதி மற்றும் நிதானம் கிடைக்கும். பாவங்களில் இருந்து விடுபட்டு இறைவனின் அருள் கிடைக்கும்.

அத்தர்

சிவலிங்கத்திற்கு அத்தர் தடவுவது பக்தியையும், தூய்மையையும் குறிக்கிறது. இது தர்மத்தையும், சாத்வீக குணத்தையும் வாழ்க்கையில் கொண்டு வரும். அன்பு, உறவு ஆகியவை பலப்படும். நன்மை மிக்க சக்திகள் அணுகி, தீய சக்திகள் விலகும். திருமணத்தில் வரும் தடை மற்றும் சங்கடங்கள் நீங்கும்.

அரிசி

சிவலிங்கத்திற்கு அரிசி தானியங்களை வழங்குவது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும். வீட்டில் உணவு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அனைத்து தோஷங்களும் நீங்கி, இறைவனின் அருள் கிடைக்கும். தொழிலில் நிதி நெருக்கடி தீரும். வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

சந்தனம்

சிவலிங்கத்திற்கு சந்தனத்தை பூசுவதால் சமூகத்தில் மரியாதை கிடைக்கும். உங்கள் புகழ் அதிகரிக்கும். பல நாட்களாக இருந்து வந்த நோய் நொடிகள் விலகும். வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். கோபம், பதட்டம், மன அழுத்தம் குறையும். ஆன்மீக விழிப்புணர்வு அதிகரிக்கும். சிவபெருமான் மிகவும் சந்தோஷமடைந்து அருள் தருவார்.

நெய்

சிவலிங்கத்திற்கு நெய் ஊற்றி அபிஷேகம் செய்வதால் உங்களின் உள் வலிமை அதிகரிக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். சொர்க்க நிலை அடையலாம். முக்தி கிட்டும். ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும். நல்ல சந்ததி வாய்க்கும். அனைத்து விதமான தடைகளையும் அகலும். ராகு-கேது, சனி போன்ற கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

எள்

எள் தானியங்களை வழங்குவது எதிர்மறை சக்திகளை நீக்கும். நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். உடல் நலம் மேம்படும். எமன் பயம் நீங்கும். கடந்த ஜென்ம பாவங்களையும், இஜன்ம பாவங்களையும் குறைக்கும். சனி பகவானின் கோபம் குறையும். துன்பத் தாங்கும் சக்தி கிடைக்கும்.

வாசனை எண்ணெய்

வாசனை எண்ணெய்யை சிவலிங்கத்திற்கு ஊற்றுவது செல்வம் மற்றும் வசதிகளைக் கொடுக்கும். நோயற்ற வாழ்வு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுகமான வாழ்க்கை கிடைக்கும். பக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை

சர்க்கரை அல்லது கரும்பு சாறு வழங்குவது வாழ்க்கையில் இனிமையையும், செழிப்பையும் குறிக்கிறது. சிவனின் மனதை மகிழ்ச்சி அடைய வைக்கும். வாழ்க்கையில் இல்லாமை நீங்கும் மன நிறைவு கிடைக்கும். எதிரிகளை ஜெயிக்கலாம். பகை நீங்கும். தேக ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.‌

தேன்

சுத்தமான தேன் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மனதில் ஏற்படும் துக்கங்கள் விலகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். இனிய குரல் கிடைக்க தேன் அபிஷேகம் செய்யலாம்.

அரிசி மாவு

சிவ லிங்கத்திற்கு அரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பண வரவு அதிகரிக்கும். குடும்ப அமைதி, மன நிம்மதி மற்றும் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். குழந்தைகள் மனதில் பயம் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் அரசன் போல் வாழ்க்கை உண்டாகும். நட்பு வட்டாரங்கள் விரிவடையும். நட்புக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். அரசனின் அன்பிற்கு பாத்திரமாகலாம்.

சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். சிவபெருமான் “கருணைமிகு தெய்வம்” என்றும், “பாவங்களைத் துடைக்கும் பரமசிவன்” என்றும் கூறப்படுகிறார். அவரை தினமும் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரத்துடன் எளிமையாக வழிபட்டாலும், அவரது அருள் திரும்பி செல்லாது என நம்பப்படுகிறது. பால், பசு நெய், தேன், அரிசி, சந்தனம், திருநீர் போன்ற தூய பொருட்களால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது உடல் மற்றும் ஆன்மாவை தூய்மைப்படுத்தும். இதன் மூலம் அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும், செல்வம், சந்ததி, திருமண யோகம், கல்வி, தொழில் ஆகியவையிலும் வெற்றியைப் பெற வழி வகுக்கும்.

இதனையும் படியுங்கள் : குபேர யோகம் பெறுவதற்கு சிவபெருமானை வழிபட வேண்டிய முறை!


Recipes AMP · Quick view
View full