அள்ள அள்ள குறையாத செல்வம் சேர வேண்டுமா ? அரிசியும், ஒரு ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் போதும்!

- Advertisement -

வறுமை என்பது அனைவரும அவர்கள் வாழ்வில் சந்தித்து வந்த ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆம், நீங்கள் நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன் பணம், காசு என அனைத்தும் என்னிடம் கொட்டி கிடைக்கிறது என்று கூறினால் அது உங்கள் தந்தை சந்தித்த வறுமையின் காரணமாக இருக்கலாம். சிலர் வறுமையை சந்தித்து விட்டு இப்போது நல்ல நிலைமையில் இருக்கலாம். ஒருவர் இப்போதும் கூட வறுமையில் மட்டுமே இருந்து கொண்டிருக்கலாம். அதனால் உங்கள் வாழ்க்கையில் வறுமை ஒன்றே இருக்கக் கூடாது என விரும்புபவர்களும், இனி வறுமையை நான் காணவே கூடாது என்று சிந்திப்பவர்களும் தாந்த்ரீக முறைப்படி நீங்கள் இதை செய்தால் மறுமையில் இருந்து விடுபட்டு உங்கள் வீட்டில் செல்வம் மடமடவன சேரும். அதைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

நாம் வீட்டில் ஒரு சில தாந்திரீக வேலைகள், பரிகாரங்கள், பூஜைகள், சில சம்பிரதாயங்கள் கடைபிடிப்பதன் மூலமாக கூட நமது ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம், வீட்டில் பணமழை பொட்ட செய்யலாம். ஆனால் உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத செல்வம் சேர வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையானது ஒரு பாத்திரம் நிறைய அரிசி ஒரு ஒரு ரூபாய் நாணயம் இது இருந்தால் போதும் உங்கள் மீது வீட்டில் குறைவற்ற செல்வம் உண்டாகுவதற்கான ஒரு தாந்திரீக வேலையை நாம் பார்க்கலாம்.

- Advertisement -

முதலில் ஒரு வெள்ளி பாத்திரம் அல்லது ஒரு கண்ணாடி பாத்திரம் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் பின் இந்த பாத்திரம் நிரம்பு அளவிற்கு நீங்கள் வீட்டிற்கு சாப்பிட உபயோகப்படுத்தும் அரிசியை சேர்த்து கொள்ளுங்கள். வீட்டில் குடும்பத் தலைவர் தன் கையில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு உங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள வறுமை விலகி செல்வம் சேர வேண்டும் என மனம் உருகி வேண்டி கொண்டு.

நீங்கள் கையில் வைத்திருக்கும் அந்த நாணயத்தை அரிசியில் புதைத்து வைத்து விடுங்கள். இதுபோன்று வீட்டில் உள்ள அனைவரும் கையில் நாணயத்தை வைத்து மனதார கடவுளை வேண்டி அரிசியல் புதைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு உங்கள் வீட்டில் சமையல் அறையில் தென்கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்கும் மூலையில் இந்த பாத்திரத்தை வைத்து விடுங்கள். இனி உங்கள் வீட்டில் குறைவற்ற செல்வம் உண்டாகும் சில நாட்களிலேயே நீங்கள் இதை உணரத் தொடங்குவீர்கள். நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள் நல்ல பலனையே உங்களுக்கும் கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here