Advertisement
ஸ்நாக்ஸ்

டீக்கடை வெங்காய போண்டா இப்படி செய்து பாருங்க! அதன் ருசியின் ரகசியம் இது தான்!

Advertisement

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெங்காய போண்டா இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள் அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. ஏனென்றால் இந்த போண்டா எல்லோருக்கும் பிடித்த டீ கடைகளில் விற்கப்படும் வெங்காய போண்டா டேஸ்ட்டில் இருக்கும்.

இந்த போண்டாவை நாம் வீட்டிலேயே அதே சுவையில் செய்து விடலாம், அதுவும் 10 நிமிடத்தில் சுலபமாக செய்து விடலாம். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

வெங்காய போண்டா | Onion Bonda Recipe In Tamil

Print Recipe
டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெங்காய போண்டா இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள் அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
ஏனென்றால் இந்த போண்டா எல்லோருக்கும் பிடித்த டீ கடைகளில் விற்கப்படும் வெங்காய போண்டா டேஸ்ட்டில் இருக்கும்.
இந்த போண்டாவை நாம் வீட்டிலேயே அதே சுவையில் செய்து விடலாம், அதுவும் 10 நிமிடத்தில் சுலபமாக செய்து விடலாம்.
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, Snack
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword Onion bonda, வெங்காய போண்டா
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 4 கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, காரத்திற்கேற்ப
  • ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
    Advertisement
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, தேவைக்கேற்ப
  • 5 புதினா இலைகள் நறுக்கியது
  • ½ டீஸ்பூன் சோம்புத்தூள்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் சிக்கன் மசாலா
  • உப்பு தேவைக்கேற்ப
  • ¼ டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1 கப் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் மைதா மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு பௌலில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா இலைகள், மிளகாய் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு, பேக்கிங் சோடா கொஞ்சம், சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
  • பிறகு அதில் முக்கால் கப் கடலை மாவு, அத்துடன் மைதா மாவு, அரிசி மாவு, சேர்த்து கலந்து மீதமுள்ள கடலை மாவு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  • குறிப்பாக மாவு தண்ணியாகவும் இருக்காமல், கெட்டியாகவும் இருக்காமல் பக்குவமாக பிசைந்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் மாவை பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து பொறித்து எடுக்கவும்.
  • இப்பொழுது ருசியான வெங்காய போண்டா தயார்.
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

6 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

7 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

8 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

10 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

10 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

12 மணி நேரங்கள் ago