இனி ருசியான பாலக் கீரை சட்னி இப்படி செஞ்சி பாருங்க! சாம்பார் கூட தேவைப்படாது இந்து ஒரு சட்னி போதும்!
இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவ
இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும்.
இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இரத்த சோகை ஏற்படாமல் இருப்பதோடு, உடலும் நன்கு வலுவுடன் இருக்கும். சிலருக்கு இந்த கீரையை கடைந்து சாப்பிட பிடிக்காது.
ஆனால் அந்த கீரையை சட்னி போல் செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த பசலைக்கீரை சட்னியானது இட்லி தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த பசலைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.