உடனடியாக உங்களுக்கு பண வரவு அதிகரிக்க கொத்துமல்லி மற்றும் அரிசி இந்த இரண்டு பொருட்கள் போதும்!

இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது.வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள்

By Prem Kumar · 8/9/2024

இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது.வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும்.

பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது. எனவே பணத்தை சம்பாதிக்கவும், அதை நமது பக்கம் ஈர்த்து நம்மிடம் தக்க வைக்கவும், புகழ் செல்வாக்குடன் வாழவும் சில விசயங்களை நாம் செய்ய வேண்டும். தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு கூட, தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக லாபத்தை பெற முடியும். வருமான தடை நீங்கி, பொருளாதாரம் உயர்ந்து, செல்வம் மழை பொழிய செய்யக் கூடிய அற்புத எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

பண வரவை தரும் கொத்தமல்லி பரிகாரம்

சமையலறையில் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்கள் மற்றும் காய்கறிகளுக்கு பண வரவை அதிகரிக்கும் தன்மை உள்ளது. பணவரவை அதிகரிக்க பல தாந்த்ரீக முறைகள் இருந்தாலும், அதில் எளிமையான முறை இந்த கொத்தமல்லி பரிகாரம். நம் வீட்டில் இருக்கக் கூடிய கொத்தமல்லி இலைக்கு பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி அதிகமாக உள்ளது என்பது ஐதீகம். அதன்படி, கொத்தமல்லியை நம் வீட்டில் தொடர்ந்து வாங்கி வைத்து வந்தால், வீட்டில் பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்திலும் கொத்தமல்லியை வீட்டில் வைத்தால் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது.

சாஸ்திரங்களில் கொத்தமல்லி பயன்படுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை வாங்கி ஒரு‌ பவுளில் வைத்து வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்திட வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு‌ முறை மாற்ற வேண்டும். இதனை‌ தொடர்ந்து செய்து வந்தால் பண‌ புழக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த கொத்தமல்லி பரிகாரம் வறுமையை நீக்குகிறது மற்றும் பொருளாதார நிலையையும் பலப்படுத்துகிறது.

திடீர் பணவரவை உண்டாகும் அரிசி பரிகாரம்

பொருளாதார நெருக்கடிகள் தீரவும், கடுமையான அலைச்சல்களை எதிர்கொள்பவர்கள் தினசரி இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உடனடி தீர்வு காணலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு‌ கண்ணாடி பவுள் நிறைய அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் யாரோ அவர் கைகளால் தினமும் குளித்து முடித்த பின் ஒரு ரூபாய் நாணயத்தை இந்த அரிசிக்குள் புதைத்து வைத்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

குறிப்பிட்ட அளவுக்கு நாணயம் சேர்ந்ததும் இதனை எடுத்து நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி விடுங்கள். இதில் இருக்கும் அரிசியை எடுத்து காகங்கள் மற்றும் பறவைகளுக்கு உணவாக வைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். அதாவது நாம் வைத்த அரிசியை பறவைகள் உண்ணும் பொழுது நம்முடைய பாவங்கள் குறைய ஆரம்பிக்கும். இதன் முலம் நம்முடைய வீட்டில் பண வரவு அதிகரிக்கும். வருமானத்திற்கான வழிகள் பிறக்கும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டிற்கு பணம் வந்து கொண்டே இருக்க இந்த இரண்டு பொருள் இருந்தால் மட்டும் போதும்!

எளிய பரிகாரங்கள் மூலமே நம்முடைய பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். அதனால் இந்த எளிய‌ பரிகாரத்தை நாம் பின்பற்றி ‌வந்தால் நம்முடைய அனைத்து பிரச்சனைகளும் சுலபமாக, விரைவில் தீர்ந்து நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்.

Recipes AMP · Quick view
View full