உங்கள் வீட்டிற்கு பணம் வந்து கொண்டே இருக்க இந்த இரண்டு பொருள் இருந்தால் மட்டும் போதும்!

- Advertisement -

இன்று நாம் பார்க்க இருக்கிற இந்த பரிகாரம் உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பண பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம் இதை நீங்கள் ஒரு முறை செய்து விட்டால் போதும் உங்கள் வீட்டின் நிலை வாசல் வழியாக வீட்டிற்கு பணம் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அது மட்டும் இல்லாமல் பலருக்கும் கடன் பிரச்சனை இருக்கும் அவர்களும் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பணம் கிடைக்கும். அதே போல் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெற இயலாமல் கஷ்டப்படுபவர்களுக்கும் இந்த பரிகாரம் நல்ல பலன் கொடுக்கும் இதை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கும் உங்கள் கைக்கும் பணம் தடை படாமல் வரும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

இரண்டு பொருட்கள் போதும்

இப்படி இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு வெறும் இரண்டு பொருட்கள் மட்டும் தான் பயன்படுத்த படுகிறோம். அதுவும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய இரண்டு பொருட்கள் தான் நம் வீட்டிலேயே இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் நாம் ஒன்றாக சேர்க்கும் போது அதில் இருந்து அதீத சக்திகள் வெளியேறும் அது இரண்டு பொருட்கள் என்னவென்றால் ஒன்று வசம்பு மற்றொற்று படிகாரம். ஒரு பொருளை வசியம் செய்யப் போகிறோம் என்றால் அதற்கு வசம்பை விட சக்தி வாய்ந்த வேற எந்த பொருளும் கிடையாது. இந்த இரண்டு பொருட்களை வைத்து நாம் பரிகாரம் செய்யும் போது நான் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் விரட்டி அடித்து விடும்.

- Advertisement -

பரிகாரம்

முதலில் இந்த பரிகாரத்தை செய்வதற்காக இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நம்ம எடுத்து வைத்திருக்கும் படிகாரம் இரண்டு கல்லாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் பயன்படுத்தும் கர்ச்சீப் அளவிலான சதுர வடிவில் இருக்கும் பச்சை துணியை எடுத்துக்கொண்டு அதில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். பின்பு வீட்டின் நிலை வாசலில் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து நாம் தயார் செய்த முடிச்சை நிலைவாசலில் கட்டிவிட்டு நிலைவாசல் தேவதைகளையும், குலதெய்வத்தையும் மனதார நினைத்து மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நேரம்

இப்படி இந்த பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும் என்றால் காலையில் சூரிய பகவான் உதிக்கும் போது அதாவது 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள் முடிச்சை தயார் செய்து. உங்கள் வீட்டின் நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும். இது போன்ற சரியாக இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து விட்டால் போதும். வீட்டில் இருக்கும் பண பிரச்சினைகள் கடன் தொல்லைகள் என அனைத்தும் தீர்ந்து. உங்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக பணம் புழங்கி இருக்கும். நீங்கள் கடனாக கொடுத்து திரும்ப வராது என்று நினைத்த கடன் பணம் கூட திருப்பி உங்களிடம் வரும் நீங்கள் வாங்கி வைத்திருந்த கடனை கூட வேகமாக அடைப்பதற்கான யோகம் உங்கள் கைகூடி வரும்.

வருடம் ஒரு முறை

இப்படி நாம் கட்டி தொங்கவிட்ட முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியமும் உங்களுக்கு கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நீங்கள் அதில் கட்டி தொங்க விட்ட முடிச்சில் உள்ள பொருட்களை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஓடும் நீர் நிலைகளில் போட்டு விடுங்கள் அல்லது மனிதனின் காலடிகளை படாத இடங்களில் போட்டு விடலாம். இவ்வாறு செய்துவிட்டு மீண்டும் அதே போல் ஒரு முடிச்சை மேலே சொன்ன நேரத்தில் தயார் செய்து நிலை வாசலில் மாட்டி விடுங்கள். அவ்வளவு தான் மறுபடியும் உங்களுக்கு வீட்டின் நிலை வாசல் வழியாக பணம் வர ஆரம்பித்து விடும். நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here