ருசியான கிராமத்து ஸ்டைல் பனங்கிழங்கு உப்புமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!
இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பனங்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்து கொடுங்கள். இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா
இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பனங்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்து கொடுங்கள். இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா என்பது தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டிய ஒரு உணவுப் பொருளாகவே பெரும்பாலும் பார்த்து வருகின்றனர். ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை!’ என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு.
இதனையும் படியுங்கள் : இட்லி உப்மா இனி இப்படி செஞ்சி பாருங்க! இட்லி சாப்பிடாதவங்க இதை விரும்பி சாப்பிடுவாங்க!
அதனால் ரவை உப்புமாவிற்கு மாறுதலாக பனங்கிழங்கு உப்புமா செய்தால் உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது. அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் போது, காலை உணவாக இந்த ரெசிபியை செய்யலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ஒரு சிம்பிளான ரெசிபி என்றே கூறலாம். இதை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் பசிக்கும் போது செய்து சாப்பிடலாம்.