இட்லி உப்மா இனி இப்படி செஞ்சி பாருங்க! உப்மாவை சாப்பிடாதவங்க இதை விரும்பி சாப்பிடுவாங்க!

- Advertisement -

மீதமான இட்லி வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. மீதமான இட்லி வேஸ்ட் பண்ணாமல் இந்த மாறி இட்லி உப்மா செஞ்சி கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான பிரெட் உப்புமா செய்வது எப்படி ?

- Advertisement -

சாப்பிடுவதோடு, மீண்டும் எப்போ செய்விங்கனு கேட்பார்கள். இந்த ரெசிபி 10 நிமிடத்தில் செய்து விடலாம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Print
No ratings yet

இட்லி உப்மா | Idli Upma Recipe In Tamil

மீதமான இட்லி வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. மீதமான இட்லி வேஸ்ட் பண்ணாமல் இந்த மாறி இட்லி உப்மா செஞ்சி கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவதோடு, மீண்டும் எப்போ செய்விங்கனு கேட்பார்கள்.
இந்த ரெசிபி 10 நிமிடத்தில் செய்து விடலாம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time5 minutes
Total Time24 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: idli upma, இட்லி உப்மா
Yield: 4 people

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • ½ கப் பெரிய வெங்காயம் நறுக்கியது
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • முதலில் மீதமான இட்லியை ப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைத்து எடுத்து சமைத்தால் மிகவும் உதிரி உதிரியாக வரும். இல்லையெண்டால் அப்படியே செய்தும் சாப்பிடலாம்.
  • இட்லியை கைகளால் உதிர்த்து விட்டு அதில் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கைகளால் கலந்து விடவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து சிவந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • 2 நிமிடம் கிளறியதும் அடுப்பை நிறுத்தவும். இப்பொழுது சுவையான இட்லி உப்புமா தயார்.