உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் டிபன் ஆக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பலவிதமான டிபன்கள் இருந்தாலும், உப்புமாவிற்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பலவகை உள்ளது. அதில் குறிப்பாக ரவை உப்புமா, சேமியா உப்புமா, இட்லி உப்புமா மிகவும் பிரபலமானவைகள்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் மசாலா உப்புமா செய்வது எப்படி ?
அந்த வகையில் நாம் இன்று பிரெட் உப்புமா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம் இந்த உப்புமா மிகவும் சுவையாக இருக்கும், குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து கொடுத்தால் திரும்ப எப்போ செய்விங்கள் என்று கேட்டும் வகையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த பிரெட் உப்புமாவை எப்படி செய்யலாம் என்பதை நாங்கள் கீழே செய்முறை விளக்கங்கள் கொடுத்துளோம், அதனை படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்கள்.
பிரெட் உப்புமா | Bread Upma Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 பிரெட் ஸ்லைஸ்
- ½ டேபிள் ஸ்பூன் கடுகு
- ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 தக்காளி பொடியாக நறுக்கியது
- ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- கொத்தமல்லித்தழை சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் தோசைக்கல்லைக் அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும், பிராட் ஸ்லைசுகளைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும்.
- பிறகு சிறிய துண்டுகளாக்கவும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளிக்கவும்.
- இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும்.
- பிறகு கடைசியாக பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
- இப்பொழுது சுவையான பிரெட் உப்புமா ரெடி.