வீட்டில் பணம் வரவு அதிகரிக்க சமையல் அறையில் இந்த ஒரு பெட்டியில் காசுகளை போட்டு வையுங்கள் போதும்!

பொதுவாக நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் நம் வீட்டில் பணம் தங்காமலேயே இருக்கும். அதைவிட பணம் அதிக அளவில் செலவழிய கூடும். அப்படி நம் வீட்டில் பணம் அதிக அளவில் செலவழியாமல் அதிகமாக பணம் சேருவதற்கு நாம் பல வகையான பரிகாரங்கள் செய்திருப்போம். ஆனால் அது எதுவுமே நமக்கு க

By ·

பொதுவாக நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் நம் வீட்டில் பணம் தங்காமலேயே இருக்கும். அதைவிட பணம் அதிக அளவில் செலவழிய கூடும். அப்படி நம் வீட்டில் பணம் அதிக அளவில் செலவழியாமல் அதிகமாக பணம் சேருவதற்கு நாம் பல வகையான பரிகாரங்கள் செய்திருப்போம். ஆனால் அது எதுவுமே நமக்கு கை கொடுக்கவில்லை என்றால் இப்பொழுது சொல்லப் போகின்ற இந்த பரிகாரமான அஞ்சரை பெட்டி ரகசியத்தை செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் பணம் சேரும். இந்த அஞ்சறைப்பெட்டி ரகசியமானது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பெண்கள் செய்து வரக்கூடியது. பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் ஒரு சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் நம் வீட்டிற்கு பணத்தை அதிகமாக கொண்டு வர முடியும். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பணத்தை ஈர்ப்பதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள்

பொதுவாக அந்த காலத்தில் எல்லாம் அனைவரது வீட்டிலும் அஞ்சறைப்பெட்டி இருக்கும் அந்த அஞ்சறை பெட்டியில் நாம் நிறைய மசாலா பொருட்களை வைத்திருப்போம். ஆனால் இப்பொழுது பெரும்பாலானோர் வீட்டில் அஞ்சரை பெட்டி இருப்பதில்லை காரணம் அழகாக ஒரே மாதிரியான டப்பாக்களில் மசாலா பொருட்களை போட்டு அழகுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் எப்பொழுதுமே எல்லோருடைய வீட்டிலும் சமையல் அறையில் இந்த அஞ்சறைப்பெட்டி இருந்தால் மிகவும் நல்லது. இந்த அஞ்சறை பெட்டியை நாம் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது சில்வர் வெண்கலம் பித்தளை போன்றவைகளில் தான் நாம் அஞ்சறைபெட்டியை பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் உள்ள அஞ்சரை பெட்டியில் மசாலா பொருட்கள் அதிகமாக நிறைவாக இருந்தால் நாம் செய்யும் சமையலும் நிறைவாக இருக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். எனவே அனைவருடைய வீட்டிலும் அஞ்சறைப்பெட்டியும் அதில் நிறைவான மசாலா பொருட்களும் இருப்பது மிகவும் நல்லது.

நம் வீட்டில் உள்ள சமையல் அறையில் அஞ்சறை பெட்டியில் இந்த ஒரு பொருள் இருப்பதன் மூலம் நம் வீட்டிற்கு அதிகமான பணம் வந்து சேரும். அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு சிவப்பு நிற பொருள்தான் அது. வேறொன்றுமில்லை காய்ந்த மிளகாய் தான். அஞ்சரை பெட்டியில் மூடி இருக்குமாறு அஞ்சலி பெட்டியை வாங்கிக் கொண்டு அந்த மூடியின் மேல் காய்ந்த மிளகாயை போட்டு வைக்க வேண்டும். குண்டு மிளகாய் நீள மிளகாய் என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இப்பொழுதே நிறைய பேர் வீட்டில் இதனை பின்பற்றுவார்கள் அஞ்சரை பெட்டியின் மேல் ஒரு சில நாணயங்களும் காய்ந்த மிளகாய் சிதறி கிடக்கும். ஆனால் இதனை இப்போது உள்ள நிறைய பேர் பின்பற்றுவது கிடையாது அவர்கள் எல்லாரும் இதனை பின்பற்றினால் நிச்சயமாக அவர்களது வீட்டிற்கு பணம் அதிகமாக வந்து சேரும்.

எனவே அனைவரது வீட்டிலும் அஞ்சரை பெட்டியின் மோடியின் மேல் காய்ந்த மிளகாய் வையுங்கள். இந்த காய்ந்த மிளகாய் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் இல்லையெனில் மாதம் ஒருமுறை யாருடைய கால் தடமும் படாத இடத்தில் இந்த காய்ந்த மிளகாய் போட்டுவிட்டு புதிதாக சில காய்ந்து மிளகாயை அஞ்சறை பெட்டியின் மேல் போட்டு வைக்கலாம். இந்த காய்ந்த மிளகாய் நாம் பயன்படுத்துவதற்கான காரணம் என்னவென்றால் எதிர்மறை ஆற்றலை போக்கக்கூடிய சக்தி உண்டு. எப்பொழுதுமே நாம் கண் திருஷ்டியை கழிப்பதற்கு காய்ந்த மிளகாய் பயன்படுத்துவோம். எனவே இந்த காய்ந்த மிளகாய் அஞ்சறைப் பெட்டியின் மேல் வைப்பதன் மூலம் நம் வீட்டிற்கு வரும் பணத்தின் மேல் உள்ள எதிர்மறை ஆற்றலும் கண் திருஷ்டியும் கழிந்து நம் வீட்டில் அதிகமான பணம் சேரும். முழு மனதோடு இதனை முயற்சி செய்து பாருங்கள்.

வீட்டில் பணம் சேருவதற்கு ஆண்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்

வீட்டில் உள்ள பெண்கள் மட்டும் தான் இந்த அஞ்சறைப்பெட்டி ரகசியத்தை பின்பற்ற வேண்டுமா என்று கேட்டால் இல்லை ஆண்களும் ஒரு சில விஷயங்கள் செய்வதன் மூலம் வீட்டிற்கு அதிகமான பணம் வந்து சேரும். ஆண்கள் அவர்கள் குளிக்கிற தண்ணீரில் கல் உப்பை சேர்த்து போட்டு குளிக்கலாம் அப்படி செய்யும் போது அவர்களின் மேல் உள்ள எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நீங்கிவிடும். பெண்களும் இதனை செய்யலாம். ஆண்களோ பெண்களோ இருவருமே அவர்களது வீட்டில் தண்ணீரை குறைவாக செலவழிக்க வேண்டும் அதிகமாக செலவழித்தால் அதன்படியே பணமும் செலவழிந்து விடும் என்று கூறுவார்கள். எனவே எந்த ஒரு பொருளையும் வீணாக்காமல் அனைத்தையும் நாம் குறைவாக செலவு செய்தால் நம் வீட்டில் பணம் அதிகமாக வந்து சேரும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் மணி பர்ஸில் பணம் சேரந்து நிரம்பி வழிய இந்த தவறுகளை மட்டும் செய்யாமல் இருங்கள் போதும்!

Recipes AMP · Quick view
View full