உங்கள் மணி பர்ஸில் பணம் சேரந்து நிரம்பி வழிய இந்த தவறுகளை மட்டும் செய்யாமல் இருங்கள் போதும்!

- Advertisement -

பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது.‌ அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் போல் வீட்டில் பணம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். அதற்காக ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நம்மால் சேர்த்து வைக்க இயலவில்லை என்றால் எவ்வளவு வருத்தப்படுவோம்.

-விளம்பரம்-

இன்றைய காலத்தில் பணம் மிகவும் முக்கியமானதாகும். பெரும்பாலான நபர்கள் என்ன தான் மணி பர்ஸ் வைத்திருந்தாலும் அதில் பணத்தை பார்ப்பது என்பது சற்று கடினமான விஷயம் தான். பெண்கள் முதல் ஆண்கள் வரை வேலைக்கு சென்றாலும் அவர்கள் பர்சில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குடும்பத்தில் பல்வேறு செலவுகள் ஏற்படும். நம் பர்சில் பல பொருட்கள் இருக்கலாம். பர்ஸில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

கருப்பு நிற மணி பர்ஸ்

பொதுவாக பர்ஸை வாங்கும்போது அதன் வண்ணத்தின் மீது நாம் அதிக கவனம் செலுத்ததில்லை. ஆனால் உண்மையில் நமது பர்ஸின் வண்ணத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக கருப்பு நிறம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் கருப்பு நிறத்திற்கு தான்‌ முன்னுரிமை கொடுப்பார்கள், ஆனால் கருப்பு நிறம் மணி பர்ஸ் மட்டும் பயன்படுத்த கூடாது. வெள்ளை நிற‌ மணி பர்ஸை பயன்படுத்தலாம் ஏனென்றால் ‌வெள்ளை நிறம் என்பது சுக்கிர பகவானுக்கு உரிய நிறம். இந்த நிறத்தை பயன்படுத்துவதால் பணமும்‌ சேர்ந்து கொண்டே இருக்கும். இல்லையென்றால் சிவப்பு, பச்சை, சாம்பல், பழுப்பு போன்ற நிறங்களில் மணி பர்ஸை வாங்கி கொள்ளலாம்.

தேவையில்லாத பொருட்கள்

பொதுவாக ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் மணி பர்ஸில் பணத்தை தவிர தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பார்கள். ஆனால் தேவையில்லாத பொருட்களை மணி பர்ஸில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மருந்து மாத்திரை, மருந்து மாத்திரை பற்றிய சீட்டுகள், பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் ‌போன்றவை ஒருபோதும் மணிபர்ஸில் வைக்கக் கூடாது. இதனை உங்கள் மணிபர்சில் வைத்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து பணம் தங்காமல் போய்விடும். அதனால் வாரத்தில் ஒரு நாள் மணி பர்ஸை சுத்தம் செய்யுங்கள்.

பர்ஸ் வைக்கும் இடம்

நாம்‌ உபயோகிக்கும் பர்ஸில் தேவையில்லாத பொருட்களை வைக்கும் போது எப்படி வீண்விரயம் ஏற்படுகிறதோ அதேபோல் நாம் பர்ஸ் வைக்கும் இடமும் சுத்தமாக இல்லையென்றால் நம்மிடம் பணம் தங்காது. அதனால் பணம்‌ வைக்கும் இடத்தை நாம்‌ சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

-விளம்பரம்-

சில்லறை நாணயங்கள்

மணி பர்ஸில் பணம் வைக்கும் போது அதனை ஒரு போதும் சுருட்டி வைக்க கூடாது. அதற்கு கொஞ்சம் பெரிய பர்ஸாக வாங்கிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் ‌பர்ஸில் பணம் வைக்கும் பொழுது சில்லறை நாணயங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து இரண்டு மூன்று சில்லறை நாணயங்களை உங்கள் பரிசில் வைத்துக் கொள்ளுங்கள்.

பர்ஸில் பணம் சேர

மணி பர்ஸில் பணத்துடன் எந்த பொருளும் சேர்த்து இல்லாமல் இருந்தால் நிச்சயம் பணம் கரைந்து கொண்டே போகும். நம் அனைவருமே பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அதனால் பணத்தை ஈர்க்கக் கூடிய பொருட்களில் ஒன்றான பச்சை கற்பூரம், துளசி, 3 ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை வெள்ளிக்கிழமையில் ஒரு வெள்ளை தாளில் மடித்து மணிபர்சில் வைத்துக் கொள்வதால் மகாலட்சுமியின் அருட்பார்வை உங்களுக்கு கிடைக்கும். இந்த நறுமணம் வாய்ந்த பொருட்களை நமது மணி பர்ஸில் வைக்கும் பொழுது நாம் எவ்வளவு செலவு செய்தாலும் அது மறுபடியும் நம்மை வந்து சேரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வருமானத்தை அதிகரித்து தரும் குபேர மூலிகை! உங்கள் சம்பளம் உயர வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள்!

-விளம்பரம்-