உங்கள் வருமானத்தை அதிகரித்து தரும் குபேர மூலிகை! உங்கள் சம்பளம் உயர வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள்!

- Advertisement -

தொழில் செய்பவராக இருந்தாலும், மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி வரும் வருமானம் உயர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். வாழ்க்கையில் வசதி, வாய்ப்புக்கள் அதிகரித்து, படிப்படியாக உயர வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் பல தொழில்கள் வரவுக்கும், செலவுக்கும் சரியாக உள்ளது. மாத வருமானம் பெறுவோரின் நிலையும் இதுவாகவே உள்ளது. வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும். அந்த நேர்மறை ஆற்றல்களை நம்மை சுற்றி அதிகரிக்க செய்து, வரும் வருமானத்தை பெருக செய்வதற்கு சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.

-விளம்பரம்-

பலர் இதற்காக ஏராளமான செலவு செய்து எத்தனனையோ பூஜைகள், பரிகாரங்கள் செய்திருப்பார்கள். பல கோவில்களுக்கும் சென்று வந்திருப்பார்கள். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தான் பலரின் புலம்பலாக உள்ளது. நமக்கு செல்வம் அதிகரிக்க குபேரரின் அருள் தேவை. குபேரனுக்கு பிடித்தமான சில காரியங்களை நாம் செய்தால் நமக்கு தடையின்றி வருமானம் வரும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் ஈட்டும் வருமானம் படிப்படியாக உயர்வதற்கு செய்யக்கூடிய எளிய பரிகார முறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

குபேர மூலிகை

ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கும். சித்தர்கள் அறிந்து வைத்து இந்த உலகிற்கு உணர்த்தியது ஏராளமான மூலிகை ரகசியங்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. அபூர்வ வகை மூலிகை எல்லாம் ஒன்றும் இல்லை. சாதாரணமாக நம் கண் முன்னே உள்ள செடிகளில் இருக்கும் மகத்துவம் வாய்ந்த குணங்கள் கூட நமக்கு தெரிவதில்லை. அத்தகைய மூலிகை செடி வகைகளில் ஒன்று தான் இந்த பரிகாரம் செய்ய உகந்தது. இதன் பெயர் வெள்ளெருக்கு. சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதும் வைத்திருக்கும் இந்த வெள்ளெருக்குப் பட்டையில் நம் வீட்டில் ஸவிளக்கேற்றினால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகி விடும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்ய வியாழக்கிழமை நல்ல நாள். குபேரனுக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. அதுவும் இந்த நாளில் குரு புஷ்ய யோகம் இருந்தால் கூடுதல் சிறப்பு. குபேர காலத்தில் குபேர பகவானை வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் சேரும் என‌ சொல்லப்படுகிறது. இந்த பரிகாரம் செய்ய நமக்கு தேவையான வெள்ளெருக்கம் வேரை எடுத்து அந்த மண்ணையெல்லாம் தண்ணீரில் கழுவி சிறிது நேரம் உலர வைத்து இந்த வேரை அந்த தாயத்துக்குள் வைத்து கொஞ்சம் விபூதி போட்டு மூடி விடுங்கள். வெள்ளி தாயத்தில் இதை போட்டால் மிகவும் சிறப்பு.

பின்பு இந்த தாயத்தை பூஜையறையில் வைத்து விளக்கு ஏற்றி குபேரருக்கு நைவேத்தியமாக இனிப்பு பொருட்கள் அல்லது ஏதேனும் பழ வகைகளை வைத்து வழிபட வேண்டும். இந்த விளக்கின் முன் அமர்ந்து கொண்டு ‘ஓம் லட்சுமி குபேராய நமஹ’ என்று மந்திரத்தை உச்சரித்து ‌உங்களுக்கு இருக்கும் பண பிரச்சினைகள் நீங்கி வருமான உயர்வு கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன்பிறகு இந்த ‌தாயத்தை அரணாக்கயிறுடன் சேர்த்து ஆண்கள் இடுப்பில் கட்டிக்‌கொள்ளுங்கள். ஆண்கள் இதை கட்டிய ஒரு சில நாட்களில் பணக்கஷ்டம் தீரும் என்று சொல்லப்படுகிறது. பெண்கள் இதை கட்டக்‌ கூடாது. ஒருவேளை உங்களுக்கு பணத்தேவை அதிகரித்தால் பூஜையறையில் அப்படியே வைத்து விடுங்கள்.

-விளம்பரம்-

தன ஆகர்ஷன சக்தியை அள்ளிக் கொடுக்கக் கூடிய வல்லமையானது இந்த வெள்ளருக்கு வேர். இதை நாம் பயன்படுத்திய சில நாட்களிலேயே நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகி பண வரவு அதிகரிக்கும். இப்படியாக நீங்கள் நம்பிக்கையோடு செய்யப்படும் இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் கழுத்தை இருக்கி பிடிக்கும் அளவு கடன் பிரச்சினை இருந்தாலும் கடன் தீர கல் உப்பு இருந்தால் போதும்!