நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால் உணவுப் பொருட்களையும் குறிக்கும். வீட்டில் இது இரண்டும் நிறைவாக இருந்தால் அந்த வீட்டில் செல்வம் பெருகும். அப்படி நம் வீட்டிலும் தனதானியங்கள் பெருக ஒரு

By Prem Kumar · 5/5/2024

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால் உணவுப் பொருட்களையும் குறிக்கும். வீட்டில் இது இரண்டும் நிறைவாக இருந்தால் அந்த வீட்டில் செல்வம் பெருகும். அப்படி நம் வீட்டிலும் தனதானியங்கள் பெருக ஒரு எளிமையான பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு 18 கொட்டை பாக்குகள், 18 நல்ல ஏலக்காய்கள், ஒரு தாமரை மலர், ஒரு ஐந்து ரூபாய் நாணயம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் எந்த கிழமைகளில் வேண்டுமானாலும் செய்யலாம்.முதலில் பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு முன்பாக இரண்டு மன்னர்கள் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெள்ளை துணியை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள பொருட்கள் ஆன தாமரை மலர், ஏலக்காய், கொட்டைப்பாக்கு, ஐந்து ரூபாய் நாணயம் என அனைத்தையும் போட்டு அதை ஒரு முடிச்சாக கட்டி மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும்.

அதன்பின்பு மகாலட்சுமி தாயார் படத்திற்கு தீப ஆராதனை காட்டி மனதார செல்வ வளம் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த முடிச்சை நீங்கள் அரிசி வைக்கும் பாத்திரத்தின் அடியில் வைத்து விட வேண்டும் அல்லது ஒரு சிறிய பாத்திரத்தில் நெல்மணிகளை வாங்கி அதற்குள்ளும் இந்த முடிச்சை வைக்கலாம் அப்பொழுது இதற்கான பலன் மிக அதிகமாகவே கிடைக்கும். ஏனெனில் தானியங்களில் நெல்மணி மட்டும் ராஜ தானியம் என்று அழைக்கப்படும். அதனால் இதற்கு பலன் அதிகம்.

இந்த முடிச்சை நாம் வைத்த பின்பு அடிக்கடி மாற்ற வேண்டும் என்பது அவசியம் கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதனை மாற்றினால் போதுமானது.

இதனையும் படியுங்கள் : பெரிய பெரிய பணக்காரர்கள் பணம் சேர யாருக்கும் தெரியாமல் செய்யும் இரகசிய பரிகாரம்!

அந்த முடிச்சில் நாம் சேர்த்துள்ள அனைத்து பொருட்களும் குபேரருக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் உகந்த பொருட்கள். எனவே நாம் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து பணவரவு அதிகரிப்பதை நம்மால் உணர முடியும். எனவே நம்பிக்கையோடு மனதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் கூடிய விரைவில் நல்லதே நடக்கும்.

Recipes AMP · Quick view
View full