தீபாவளிக்கு முன்பாக பணம் தானாக உங்களைத் தேடி வர வேண்டுமா ? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

இன்றைய காலத்தில் பணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். தொட்டதிற்கெல்லாம் பணம் தான் பேசும். இந்தப் பணத்தை ஈட்டத் தான் நாம் அனைவரும் பாடுபடுகிறோம். ஒரு சிலரால் எளிதில் பணம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால் பலருக்கோ பணம் சம்பாதிப்பது பெரும்பாடாகத் தான் இருக்கிறது. அவ்வாறு சம்பாத்திதாலும்

By ·

இன்றைய காலத்தில் பணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். தொட்டதிற்கெல்லாம் பணம் தான் பேசும். இந்தப் பணத்தை ஈட்டத் தான் நாம் அனைவரும் பாடுபடுகிறோம். ஒரு சிலரால் எளிதில் பணம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால் பலருக்கோ பணம் சம்பாதிப்பது பெரும்பாடாகத் தான் இருக்கிறது. அவ்வாறு சம்பாத்திதாலும் அதை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபடத்தான் வேண்டியிருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பர்ஸில் துளிக்கூட பணம் தங்குவதில்லை என்ற கவலை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் சிலருக்கு பணம் தானாக தேடி வந்துவிடும்.

வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும். நம்மை செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் மாற்றிக்கொள்ள அந்த மஹாலக்ஷ்மி அருள் அவசியம் தேவை. எத்தனையோ கோவிலுக்கு போய்விட்டோம், பார்க்கும் ஒவ்வொருவரும் சொல்லும் பரிகாரங்கள் அனைத்தையும் செய்து, எந்த பலனும் இல்லை. வருமானம் பெருகுவதற்கு வழியே இல்லையா என வருத்தப்படுபவர்களுக்கு எளிய பரிகாரத்தின் மூலமே தீர்வை பெற முடியும்.

பணத்தைக் காந்தம் போல இருக்கும் மந்திரம்

தீபாவளி என்றாலே தீப ஒளியில் வீடு முழுவதும் ஐஸ்வர்யம் பெருகி நாம் ஏற்றி வணங்கும் தீபத்தின் வழியாக மகாலட்சுமி தேவி நமது வீட்டிற்குள் வாசம் செய்வதாகும். தீபாவளி என்றால் அதிக பணம் செலவழித்து மகிழக்கூடிய நேரம். ஒவ்வொரு முறையும் கூடுதலான ரூபாய் செலவழிக்கும் போது தீபாவளிக்கு பணத்தேவை நிச்சயம் இருக்கும் நினைத்து அதனால் நம்மில் பெரும்பாலோர் அதிக பணம் தேடுகிறோம். இந்த பரிகாரத்தை இன்று தொடங்கி தீபாவளி வரை செய்யுங்கள். அதற்கு பிறகு செய்தாலும் தவறு கிடையாது. பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே தான் இருக்கும்.

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும் எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு. பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும்போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. நேரத்தில் எழுந்து பூஜை செய்தால் குடும்பம் தளைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதை கேட்டாலும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். அதனால் நீங்கள் மந்திரத்தை உச்சரிக்க ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. இந்த நேரத்தில் எழுந்தவுடன் குளித்து முடித்து தான்‌ இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

உங்கள் கட்டைவிரல் மற்றும் மோதிர விரல் இரண்டும் ஒன்றாக படும்படி முத்திரை வைத்து கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கிறதோ அதனை இந்த பிரபஞ்சத்திடம் கேளுங்கள். பிறகு ‘ஸ்ரீ தனயந்த்ர வர வர ஸ்வாஹா’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த மந்திரத்திற்கு பணத்தை உங்களை நோக்கி காந்தம் போல ஈர்த்து வரக் கூடிய சக்தி உள்ளது. அதனால் உங்களுக்கு நீண்ட காலமாக வராத தொகையாக இருந்தாலும் சரி, பணம் சம்பாதிப்பதற்கான வழியே இல்லை என்றாலும் சரி அவை அனைத்தும் நீங்கி பணம் வருவதற்கான வழிகள் பிறக்கும்.

பணம் தேவை உள்ளவர்கள் தொடர்ந்து 11 நாட்கள் இந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்து வந்தால் பணவரவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன், இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தர இந்த இரண்டு பொருள் கையில் இருந்தால் போதும்!

Recipes AMP · Quick view
View full