Advertisement
ஆன்மிகம்

இந்த மூன்று பொருட்கள் மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் பணத்தை ஈர்த்து கொண்டே இருக்கும்!

Advertisement

பொதுவாக நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் பொருள்களுக்கு இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி பலரும் கேள்வி
பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் சில பொருட்களில் தெய்வீக தன்மைகளும், தாந்திரீக பரிகார தன்மைகளும் ஒளிந்து இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. அதிலையும் சில பொருட்களில் நமக்கு வீட்டிற்கு செல்வதை கொண்டுவந்து நம் வீட்டின் பணப்புழக்கத்தை அபரீ விதமாக பெருக்கும் சக்தி கொண்டதாகவும் இருக்கும். அதனால் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் இதை பற்றி தெளிவாக காணலாம் வாருங்கள்.

வாசனை மிகுந்த பொருள்

பொதுவாக வீட்டில் இருக்கும் சில பொருட்கள் சில தெய்வத்துக்கு இஷ்டப்பட்ட பொருட்களாக அந்த கடவுளின் அம்சமாகவே இருக்கும். ஆனால் வாசனை மிகுந்த அத்தனை பொருட்களும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக சொல்லப்படுவது. அதிலும் நல்ல வாசனை, நேர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்றும். துர்வாசனை எங்கு நிறைந்து காணப்படுகிறது எதிர்மறை ஆற்றல் எங்கு நிறைந்துள்ளதோ அங்கு மூதேவி வந்து வாசம் செய்கிறாள் என்று கூறுவார்கள். அதாவது உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் அழுக்கு படிந்த இடங்கள் அதிகமாக உள்ளது, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி கொண்டே இருக்கிறது, துர்வாசனைகள் அதிகமாக உள்ளது. என்றால் இது போன்ற இடங்களில் துரர் தேவிகள் வாசம் செய்வார்கள். உங்கள் வீட்டை தரித்திரம் பற்றிக் கொள்ளும்.

Advertisement

சோம்பு, ஏலக்காய், கிராம்பு

சரி வாருங்கள் பதிவிற்க்குள் போகலாம், அப்படி எந்தெந்த பொருட்கள் வீட்டிற்கு பணத்தை ஈர்த்து தரும் சக்தி கொண்டது தெரியுமா? சோம்பு, ஏலக்காய், கிராம்பு இந்த மூன்று பொருட்களும் மிகுந்த வாசனை மிக்க

Advertisement
பொருட்கள். இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் போது. அது உங்கள் வீட்டிற்கு பணத்தை ஈர்த்து தரும் அதனுடன் தெய்வீக சக்தியிம், தாந்திரிக சக்தியும் நிறைந்து காணப்படும். அதனால் சிறிதளவு சோம்பு எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு வெள்ளை துணியை விரித்து அதில் இந்த பொருட்களை போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.
Advertisement

இங்கு வையுங்கள்

இப்போது இந்த மூட்டையை நீங்கள் வீட்டில் எங்கெங்கெல்லாம் பணம் வைத்து எடுப்பீர்களோ அந்த இடங்களில் எல்லாம் இந்த பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி இந்த பொருட்களில் இருந்து வெளிவரும் தெய்வீக வாசனை மற்றும் நேர்மறை ஆற்றல்கள் உங்கள் வீட்டிற்கு பணத்தை வசியம் செய்து எடுத்து வருவதுடன் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் துர்வாசனைகளை வெளியேற்றிவதிலும் சிறந்த பங்களிக்கிறது.

வருமானம் அதிகரிக்கும்

இப்படி இந்த தயார் செய்த முட்டையில் இந்த பொருட்களை மட்டும் போடாமல் பச்சை கற்பூரம், பட்டை போன்ற பொருட்களையும் நாம் போட்டு பயன்படுத்தலாம். இப்படி நாம் முடிந்து வைத்திருக்க மூட்டையை நம் பணம் வைக்கும் மணி பர்ஸ், தங்க நகைகள் வைக்கும் இடங்களில் வைக்கலாம். இதனால் உங்கள் பணம் வீண் செலவாகாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். சிறிது நாட்களில் உங்களுடைய வருமானமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

46 நிமிடங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

1 மணி நேரம் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

3 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

5 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

7 மணி நேரங்கள் ago