கல்வி தடையை நீக்கக்கூடிய பஞ்சகவ்ய தீபம்!!

இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. நாம் கடினமாக உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தை கூட சுலபமாக சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு கல்வி அறிவு மிகவும் தேவை. கல்வி அறிவை பொருத்து தான் பலரும் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகிறார்கள். கல்வியறிவை பெற

By ·

இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. நாம் கடினமாக உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தை கூட சுலபமாக சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு கல்வி அறிவு மிகவும் தேவை. கல்வி அறிவை பொருத்து தான் பலரும் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகிறார்கள். கல்வியறிவை பெற வேண்டும் என்பது மட்டுமே மிகவும் முக்கியமான நோக்கமாக அனைவருக்கும் இருக்க வேண்டும். நாம் நினைத்த காரியத்தை நினைத்தபடி சரியாக செய்து முடிப்பதற்கு கூட சில நேரத்தில் கல்வி அறிவு தேவைப்படும். தொழில் வியாபாரம் அனைத்தும் சிறந்து விளங்குவதற்கும் கல்வி தேவைப்படும். கல்வியறிவை பெறுவதற்காக பல தடைகள் வரும் அந்த தடைகளை நீக்குவதற்கு வீட்டில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

தீப வழிபாடு

தெய்வ வழிபாட்டிற்கு தீபம் மிகவும் முக்கியமான ஒன்று அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு சேர குடியிருக்க கூடிய கோமாதாவின் சாணத்தில் இருந்து தயாரிக்க கூடிய தீப விளக்காக திகழ்வதுதான் பஞ்சகவ்ய விளக்கு. இந்த விளக்கில் தினமும் தீபம் ஏற்று வழிபாடு செய்தால் வீட்டில் யாகம் செய்த பலன் கிடைக்கும். நம்முடைய புராணங்களின்படி அப்படிப்பட்ட விளக்கை எந்த முறையில் ஏற்றினால் ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதி தேவியின் அருளை பெற்று கல்வி தடைகளை நீக்க முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்.

யாகத்திற்கு சமம்

வீட்டில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்றால் வசதியானவர்கள் உடனையாகம் செய்து அதற்கான பலனை பெற்று வீட்டில் பிரச்சனைகளை குறைத்துக் கொள்வார்கள். ஆனால் சாதாரண குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள் அந்த யாகங்களை செய்ய முடியவில்லை என்றால் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தாலே போதும் யாகம் செய்த பலனை பெற முடியும். வீட்டில் உள்ள பிரச்சினைகளாக இருந்தாலும் சரி கல்வியில் இருக்கக்கூடிய தடைகளாக இருந்தாலும் சரி எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் இந்த விளக்கு சரி செய்யும்.

விளக்கு ஏற்றும் முறை

இந்த விளக்கை வளர்பிறையில் வரக்கூடிய புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ஏற்ற ஆரம்பிக்க வேண்டும்‌. காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு பிறகு ஒரு கண்ணாடி கிண்ணம் எடுத்து அதில் சிறிதளவு கற்கண்டு தண்ணீர் சிறிது நாட்டுச் சர்க்கரை சிறிதளவு பன்னீர் சேர்த்து அதற்குள் ஒரு கிண்ணம் வைத்து பஞ்சகவ்ய விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

சரஸ்வதி ஹயக்ரீவர் வழிபாடு

எரிகின்ற தீபத்தை பார்த்து சரஸ்வதி தேவியின் மந்திரம் அல்லது ஹயக்ரீவரின் மந்திரத்தை முழு மனதோடு உச்சரித்து கல்வி தடை நீங்க வேண்டும் என்று இந்த வழிபாட்டை செய்யலாம். தொடர்ச்சியாக 48 நாட்கள் இதனை செய்ய வேண்டும் அந்த விளக்கு முழுமையாக இருந்து சாம்பலானதும் ஒரு கருப்பு நிற கவரில் சேகரிக்க வேண்டும். தினமும் கண்ணாடி கிண்ணத்தில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும் 48 நாட்கள் சேகரித்து வைத்த சாம்பலை அருகில் உள்ள கடலில் கரைத்து விட்டு மூன்று முறை கடலில் மூழ்கி எழுந்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அனைத்து கல்வி தடைகளும் பிரச்சனைகளும் சரியாகும். யாகத்திற்கு சமமான இந்த பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றி அதற்கான பலன்களை முழுமையாக பெற்றுக்கொள்ளுங்கள்.

இதனையும் படியுங்கள் : பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும் எளிமையான பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full