- Advertisement -
Home ஆன்மிகம் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும் எளிமையான பரிகாரம்!!

பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும் எளிமையான பரிகாரம்!!

- Advertisement -

ஒவ்வொரு மனிதருக்கும் மனதிற்குள் நிறைய பிரச்சனைகள் இருக்கும். குடும்ப பிரச்சனை, கல்வியில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை, சொந்த பந்தங்களோடு பிரச்சனை, மாமியார் மருமகள் பிரச்சனை என அனைவருக்குமே மனதிற்குள் ஒரு பிரச்சனை இருக்கும். தினமும் காலையில் கண்விழிக்கும் போது பிரச்சனை இல்லாமல் அந்த நாளை எப்படி கடந்து செல்வது என்ற யோசனை வந்துவிடும். அந்த நாளை இனிமையாக தொடங்குவதற்கு எளிமையான ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக செய்ய வேண்டியவை

காலை கண்விழித்ததும் முதலில் இரண்டு கைகளையும் சாமி கும்பிடுவது போல் வைத்து நெஞ்சுக்குழிக்கு நேராக வைத்து நீங்கள் உங்களுடைய சிறந்த நட்சத்திரத்தை சொல்லி இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் என்றும் நான் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றும் சொல்லி இரண்டு கைகளையும் அழுத்தம் கொடுத்து சாமி கும்பிடுவது போல் செய்ய வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் நெஞ்சு குழிக்கு அருகில் வைத்து அழுத்தம் கொடுத்தபடி வைத்து எடுக்க வேண்டும். அழுத்தம் கொடுத்து எடுப்பதை சிறிது நேரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறந்த நட்சத்திரம்

அப்படி செய்யும் போது ஒரு நிமிடத்திற்கு நீங்கள் பிறந்த நட்சத்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். மேலும் இந்த நாள் நன்றாகவே செல்லும் என்பதை மனதிற்குள் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை ஒரு நிமிடம் செய்து முடித்துவிட்டு பிறகு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கினால் நிச்சயமாக அன்றைய நாள் நல்ல நாளாகவே அமையும். அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்வதற்கான ஒரு உத்வேகம் கிடைக்கும்.

இதனை செய்ய வேண்டிய கால அளவு

இந்த பயிற்சியை செய்வதற்கு முதலில் முழுமையான நம்பிக்கை தேவை. நம்பிக்கை இல்லாதவர்கள் இதனை செய்ய வேண்டாம் தொடர்ந்து 15 நாட்கள் இதனை நீங்கள் செய்து பார்த்தால் நிச்சயமாக உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுந்து விட்டு காலையில் சுறுசுறுப்பாக இதனை செய்தால் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இரவு நேரத்தில் அதிகமாக கண் விழித்திருக்காமல் காலை 6:00 மணிக்கு எழுந்து இதனை செய்ய வேண்டும். இரவு விரைவாக தூங்கி காலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்களுக்கு பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். நல்ல தூக்கத்தோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக நல்லதே நடக்கும்.

இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டம் தீர முருகனுக்கு ஒரு ரூபாய் பரிகாரம்!!