ருசியான பன்னீர் மக்னி இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பன்னீர் மக்னி செய்
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பன்னீர் மக்னி செய்யுங்கள். இந்த பன்னீர் மக்னி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் மக்னி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலாவில் இருந்து வேறுபட்டது. பன்னீர் டேஸ்ட்டான உணவு என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் பன்னீர் ஹெல்த்தியான உணவும் கூட. இந்த பன்னீரை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன. பன்னீரில் கால்சியமும், புரதச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வலுவான பற்கள் மற்றும் எலும்பு பெறவும், உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. இது தவிர பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இன்னும் பல விதமான நன்மைகளை பன்னீரில் உள்ளன. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள பன்னீரில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக பன்னீர் மக்னி செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். இந்த பன்னீர் மக்னி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் மக்னி செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் நூடுல்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு டிபனுக்கு பக்காவாக இருக்கும்!