Home சைவம் காரசாரமான ருசியில் பன்னீர் நூடுல்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு டிபனுக்கு பக்காவாக...

காரசாரமான ருசியில் பன்னீர் நூடுல்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

நூடுல்ஸ் அப்படிங்கிறது இப்போ எல்லாருக்குமே பிரபலமா புடிச்ச ஒரு சைனீஸ் வகை உணவா மாறிக்கிட்டு இருக்கு. அந்த நூடுல்ஸ்ல நம்ம இந்தியர்களுக்கு ஏத்த மாதிரியான சில மசாலா பொருட்களை சேர்த்து நமக்கு பிடிச்ச மாதிரியும் அதை மாற்றி செஞ்சிட்டு இருக்கோம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம சூப்பரா நூடுல்ஸ் பண்ண போறோம். குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிச்ச டிஸ்ல ஒன்னு தான் இந்த நூடுல்ஸ். நூடுல்ஸ் எப்படி இருந்தாலும் பசங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

இப்பலாம் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் இந்த நூடுல்ஸ் ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. நூடுல்ஸ்ல டக்குனு செய்ற மேகி நூடுல்ஸ் இருந்தாலும், கடைகளில் கிடைக்கிற பெரிய பெரிய நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். வெஜ் நூடுல்ஸ் ,எக் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ், அப்படின்னு ஏராளமான வெரைட்டிஸ் நூடுல்ஸ்ல இருக்கு. குழந்தைகளோட ஆரோக்கியத்தை மனசுல வச்சுட்டு பேரன்ட்ஸ் இப்போ குழந்தைகளுக்கு நூடுல்ஸ் கடைகள்ல வாங்கி கொடுக்காம வீட்லையே செஞ்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த வகையில் நம்ம இப்போ பன்னீர் நூடுல்ஸ் கடைகள்ல கிடைக்கிற மாதிரியே வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமான முறையில செய்றதுன்னு பார்க்க போறோம். நூடுல்ஸ் நாளே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இதுல பன்னீர் நூடுல்ஸ் என்றால் சொல்லவா வேணும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஏன்னா பன்னீர் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். ரொம்ப வே சுவையான வீட்லையே செய்யக்கூடிய இந்த பன்னீர் நூடுல்ஸ் எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

பன்னீர் நூடுல்ஸ் | Panneer noodles recipe in tamil

அந்த வகையில் நம்ம இப்போ பன்னீர் நூடுல்ஸ் கடைகள்ல கிடைக்கிற மாதிரியே வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமான முறையில செய்றதுன்னு பார்க்க போறோம். நூடுல்ஸ் நாளே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இதுல பன்னீர் நூடுல்ஸ் என்றால் சொல்லவா வேணும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஏன்னா பன்னீர் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். ரொம்ப வே சுவையான வீட்லையே செய்யக்கூடிய இந்த பன்னீர் நூடுல்ஸ் எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: dinner
Cuisine: Chinese
Keyword: Baby Corn Veg Noodles, chicken noodles, Japanese Noodles
Yield: 5 People
Calories: 269kcal
Cost: 100

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பன்னீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பாக்கெட் பெரிய சைஸ் நூடுல்ஸ்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 குடைமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 ஸ்பூன் சர்க்கரை
  • 1 ஸ்பூன் சோயா சாஸ்
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பன்னீரை நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதித்த உடன் பெரிய சைஸ் நூடுல்ஸை அதில் சேர்த்து அரை பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், சேர்த்து லேசாக வதக்கவும்.
  • பின்பு பொரித்து எடுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறவும்.
  • சோயா சாஸ், தக்காளி சாஸ் , மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக கிளறியவுடன் நூடுல்ஸ் செய் அதில் சேர்த்து கிளற வேண்டும்.
  • இறுதியாக அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான சட்டென்று செய்து முடிக்கக்கூடிய பன்னீர் நூடுல்ஸ் தயார்.

Nutrition

Calories: 269kcal | Carbohydrates: 10g | Protein: 26g | Fat: 45g