பன்னீர் பாப்கான் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்டா இருக்கும்!!
பன்னீர் வைத்து பன்னீர் 65, பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர், பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில பன்னீர் வச்சு இந்த அட்டகாசமான ஒரு ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும். நல்லா மொறு மொறுன்னு
பன்னீர் வைத்து பன்னீர் 65, பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர், பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில பன்னீர் வச்சு இந்த அட்டகாசமான ஒரு ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும். நல்லா மொறு மொறுன்னு உள்ள சாஃப்டா சாப்பிடறதுக்கே அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. குழந்தைகளுக்கு லீவு விடப் போறாங்க தினமும் குழந்தைகள் ஒவ்வொரு ஸ்நாக்ஸ் கேட்பாங்க அப்படி கேட்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.
சின்ன குழந்தைகள் மட்டும் இல்லாம வீட்ல இருக்க கூடிய பெரியவங்களும் டீ காபியோட இதை சாப்பிடுவதற்கு ரொம்பவே விரும்புவாங்க. பன்னீர் 65 செஞ்சுருப்பீங்க ஆனா அது ரொம்ப மொறு மொறுப்பாக இருக்காது. ஆனா கார்ன் ல போட்டு பிரட்டி எடுத்து பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும். முதலில் பன்னீரை குட்டி குட்டி ஆக நறுக்கி அதுல மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது, லெமன் ஜூஸ் எல்லாமே சேர்த்து ஊற வைத்து விடனும். அப்பதான் நல்லா மசாலா இறங்கி பொரித்து சாப்பிடும்போது செம டேஸ்டா இருக்கும். பன்னீர் புரோட்டின் நிறைந்தது. அந்தப் பன்னீரை அடிக்கடி சாப்பிடணும் ஆனா சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான பன்னீர் பாப்கார்ன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கார்லிக் பன்னீர் ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!