பணம் சம்பாதிக்க செய்ய வேண்டிய பரிகாரம்!!

மகாலட்சுமி தேவியாருக்கு மிகவும் உகந்த கிழமை என்றால் அது வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று இந்த அற்புதம் வாய்ந்த ஆன்மீகம் சொல்லும் சந்திர பரிகாரத்தை வீட்டில் செய்பவர்களுக்கு வீட்டில் பணம் அதிகரிக்கும். கஷ்டங்கள் இருந்த இடமே தெரியாமல் போகும் இந்த வழிபாட்டிற்கு பின்னே ஒரு சூட்சமமும

By ·

மகாலட்சுமி தேவியாருக்கு மிகவும் உகந்த கிழமை என்றால் அது வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று இந்த அற்புதம் வாய்ந்த ஆன்மீகம் சொல்லும் சந்திர பரிகாரத்தை வீட்டில் செய்பவர்களுக்கு வீட்டில் பணம் அதிகரிக்கும். கஷ்டங்கள் இருந்த இடமே தெரியாமல் போகும் இந்த வழிபாட்டிற்கு பின்னே ஒரு சூட்சமமும் உள்ளது. மகாலட்சுமி தேவியார் வழிபாட்டின் போது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதன் மூலம் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து போகும் என்பது ஐதீகம்.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி பவுல் அல்லது பீங்கான் பவுல் தேவைப்படும். கல் உப்பு தேவைப்படும் துளசி செடி வேர் அல்லது துளசி செடியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறிய துண்டு கட்டை தேவைப்படும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு செய்ய வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

கண்ணாடி பவுல் அல்லது பீங்கான் பவுலில் கல்லுப்பை வைத்து அதன் மேல் துளசி செடியின் வேர் வைத்து பெருமாள் பாதத்தில் வைத்து விட வேண்டும். பூஜை அறையில் இதனை வைத்து வெள்ளிக்கிழமை காலையில் குளித்துவிட்டு பெருமாளுக்கு ஒரு தீபமும் ஏற்ற வேண்டும். விரதம் இருக்க முடியும் என்றால் அந்த விரதமும் இருக்கலாம். பெருமாளை நினைத்த இந்த வழிபாட்டை செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் கூட பெருமாள் பாதங்களில் இதனை வைத்தால் மிகவும் நல்லது.

பெருமாள் வழிபாடு

அந்த ஏகாதசி நாளன்று முழுவதும் பெருமாளை நினைத்து பெருமாளே கோவிந்தா ஓம் நமோ நாராயண என்றெல்லாம் மனதார பெருமாளை நினைத்து மந்திரத்தை சொல்ல வேண்டும். சனிக்கிழமை மாலை நேரத்தில் பெருமாளுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு துளசி இலை வேர் அல்லது கட்டையை மட்டும் அப்படியே பத்திரமாக படம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விடலாம். தொடர்ந்து 48 நாட்களுக்கு மட்டுமே இந்த துளசி செடி வேர் அல்லது கட்டைக்கு சக்தி இருக்கும். பல பிரச்சினை முடிந்தவுடன் 48 நாட்கள் கழித்து கல்லுப்பை கரைத்து யாருடைய கால் தடமும் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். துளசி வேர் அல்லது கட்டையையும் அதேபோல் தூக்கி யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் மகாலட்சுமி தேவியாரும் பெருமாளும் உங்களுக்கு நல்ல வழியை காட்டுவார்கள். மேலும் துளசி வேர் அல்லது துளசி செடியிலிருந்து கட்டையை எடுக்கும் போது ஏகாதசி நாள் என்று பறிக்கக் கூடாது எனவே அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை அன்று இதனை செய்ய வேண்டும்.

இதனையும் படியுங்கள் : கடன் சுமையை குறைக்கும் நவதானிய பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full