Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் கடன் சுமையை குறைக்கும் நவதானிய பரிகாரம்!

கடன் சுமையை குறைக்கும் நவதானிய பரிகாரம்!

இந்த உலகத்தில் உள்ள அனைவரும் என்னதான் வேலை பார்த்து பணம் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் கடன் வாங்காமல் யாராலும் இருக்கவே முடியாது ஆனால் அந்த கடனை திருப்பி அடைப்பதற்கு படாத பாடு படுவோம். ஆனால் மிகவும் சுலபமாக அந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளியேறுவதற்கு கடனை சீக்கிரத்தில் அடைப்பதற்கு வெள்ளிக்கிழமைகளில் ஒரு சில பொருட்களை வாங்குவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

கல் உப்பு

பொதுவாக வெள்ளிக்கிழமை நாளில் மகாலட்சுமிக்கு உகந்த தினம் என்பதால் அன்று லட்சுமி கடாட்சம் பொருந்திய கல் உப்பு வாங்கலாம். இப்பொழுதெல்லாம் அனைவருடைய வீட்டிலும் சால்ட் உப்பு தான் பயன்படுத்துகிறார்கள் ஆனால் எந்த வீட்டில் எல்லாம் கல்லுப்பு பயன்படுத்துகிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் இருக்கும் எனவே கடன் சுமையும் குறையும்.

நவதானியங்கள்

வெள்ளிக்கிழமை அன்று நவதானியங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்கினால் சுக்ரி யோகம் கிட்டும் என்று கூறப்படுகிறது வெள்ளிக்கிழமை என்று நவதானியங்களில் ஓபன் செய்யும் கொஞ்சமாக வாங்கிக் கொள்ள வேண்டும் இந்த நவதானியங்களில் உள்ள ஒவ்வொரு தானியத்திற்கும் மிகப்பெரிய சக்தி உள்ளது. நவதானியங்களில் உள்ள ஒன்பது தானியங்களும் 9 வகையான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது. கோவில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுக்கும் போது நவதானியம் பூஜைகள் செய்து முளைப்பாரி எடுப்பார்கள். மேலும் நவதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் உடலுக்கு ஆரோக்கியமானது.

நவதானியங்களின் நன்மைகள்

நவதானியங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் கடன் சுமையை அடைக்கவும் மிகவும் உகந்தது. நவதானியங்களை வெள்ளிக்கிழமையில் வாங்குவது சிறந்தது. வார வாரம் வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு தானியத்தை வாங்கி சேர்த்து வருவது உங்களுடைய கடன் சுமையை குறைக்கும்.

-விளம்பரம்-

வெள்ளி பொருட்கள்

வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி பொருட்களை வாங்குவதும் சுக்கிர யோகம் கிடைக்க ஒரு நல்ல வழி. வெளியான ஏதாவது ஒரு பொருட்களை நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என்றால் அதனை வெள்ளிக்கிழமையில் வாங்குங்கள் அன்று வாங்கினால் உங்களுக்கு சுக்ரயோகம் கிடைக்கும். உங்களுக்கு வெள்ளி பொருட்கள் வாங்குவதாக இருந்தால் மட்டும் அதனை வெள்ளிக்கிழமையில் வாங்க வேண்டும் ஆனால் மற்றவர்களுக்கு வாங்கி கொடுப்பதாக இருந்தால் அதனை வெள்ளிக்கிழமைகளில் வாங்க கூடாது. மேலும் வெள்ளிக்கிழமை அன்று தயிரை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கக் கூடாது. வீட்டில் கடன் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதற்கு கல் உப்பு அரிசி ஊறுகாய் தயிர் அனைத்துமே வீட்டில் நிறைந்து இருந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய அவசியம் நாம் கடை பிடிக்க வேண்டியவை!!