Home ஆன்மிகம் வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய அவசியம் நாம் கடை பிடிக்க வேண்டியவை!!

வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய அவசியம் நாம் கடை பிடிக்க வேண்டியவை!!

தூய்மை எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் சக்தியும் குடியிருக்கும் என்பது ஐதீகம். இல்லத்தில் தூய்மை இருந்தால், உண்மையான பக்தி இருந்தால், அங்கே கடவுளின் சாந்நித்தியம் பீடமிட்டு அமர்ந்துகொள்ளும். அதேபோல் நம் உள்ளத்தில் உண்மையும் தூய்மையும் இருந்தால், மனத்தில் தெய்வம் நிறைந்திருக்கும். இன்னும் இன்னுமாக வழிநடத்தும் என்கிறார்கள் மூத்த பெருமக்கள்.

-விளம்பரம்-

குடும்பம் சீரும் சிறப்புமாக திகழ்வதற்கு மகாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை வேண்டும், அவளின் கடாக்ஷம் இருந்தால்தான் சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்கின்றன சாஸ்திர நூல்கள். அதனால்தான், செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் வீட்டை சுத்தம் செய்கிறோம். நன்றாகத் துடைத்து கோலமிடுகிறோம். முதல்நாளே பூஜையறையில் உள்ள பொருட்களையும் விளக்குகளையும் நன்றாகத் தேய்த்து சுத்தமாக்கிக் கொள்கிறோம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜைகளை ஆத்மார்த்தமாகச் செய்கிறோம்.

மகாலக்ஷ்மி தாயார் நிரந்திரமாக நமது வீட்டில் தங்குவதற்கும், அவரின் கடாட்சம் பெறுவதற்கும், என்னென்ன செய்யவேண்டும் என இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக

அதிகாலை 5 மணி என்பது பிரம்ம முகூர்த்தம். இந்த வேளையில் எழுந்திருப்பது வீட்டின் தரித்திரத்தைப் போக்கும். எழுந்தவுடன் வீட்டு வாசலில் கோலமிட வேண்டும்.

வீட்டை சுற்றி பூச்செடிகள் வைத்து பராமரித்து வரலாம். வாசனை மிகுந்த இடத்தில் லட்சுமி தாயார் வாசம் செய்வார் என்பது முன்னோர்கள் கூற்று.

-விளம்பரம்-

வீட்டில் நுழைகின்ற இடத்தில் பெரிய கண்ணாடி அல்லது கற்பக விநாயகர் வைக்க வேண்டும். இதனை நமது வீட்டிற்கு வருபவர்கள் பார்க்கும் வண்ணம் வைக்க வேண்டும். இப்படி வைத்தோமேயானால் நமது வீட்டை எந்த தீய சக்தியும் அண்டாது.

வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு இருமுறையாவது வீட்டைக் கழுவி, அப்படியே பூஜை அறையையும், சமயலறையையும் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் ஏதாவது நறுமணம் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்காக பூஜை அறையில் எப்பொழுதும் நறுமணமான மலர்கள் அல்லது ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம்.

-விளம்பரம்-

மஞ்சள், குங்குமம் மிகவும் மங்களகரமாகவும், லட்சுமிக்கு உகந்தாகவும் கருத்தப்படுகிறது. அதனால் நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு, குங்குமம், பூ, ஆகியவற்றை கொடுத்து அனுப்ப‌ வேண்டும். அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு யார் வந்தாலும் சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும்.

நமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை மலர்ந்த முகத்துடன் உபசரிக்க வேண்டும். ஏனென்றால் விருந்தாளிகள் வரும் பொழுது அவர்களுடன் மகாலட்சுமியும் வருவார்களாம், எனவே விருந்தாளிகளை அன்புடன் உபசரித்தாள், விருந்தாளிகள் வீட்டை விட்டு கிளம்பும் போது மகாலட்சுமி நம் வீட்டுலேயே தங்கிவிடுவார்களாம்.

வெள்ளி கிழமை நாட்களில் மகாலட்சுமியை மனதில் நினைத்து, நாணயங்களினால் அர்சனை செய்து அந்த நாணயங்களை குவியலாக நமது வீட்டில் சேர்த்து வைத்திருந்தாலே போதும் மஹாலட்சுமி நம்முடைய வீட்டில் என்றென்றும் குடியிருப்பாள்.

குபேரர் அருள்‌ கிடைக்க வேண்டுமென்றால் நம்முடைய சமயலறையில் மஞ்சள், உப்பு மற்றும் ஊறுகாய் என்றும் குறையாமல் இருக்க வேண்டும்.

இந்த சின்ன சின்ன விஷயங்களை நாம் நமது வீட்டில் கடைபிடித்து வந்தாலே போதும் மகாலட்சுமி தாயார் மன மகிழ்ந்து நம்முடைய வீட்டில் என்றென்றும் தங்கி விடுவாள்.

இதனையும் படியுங்கள் : இந்த செடியை வீட்டில் வளர்த்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் இருப்பதற்கு சமம்! பண வரவு அதிகரிக்கும்!