கொடுத்த கடனை சீக்கிரம் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!!

கடன் என்ற வார்த்தையை சொன்னாலே ஒரு சிலருக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கும் ஒரு சிலருக்கு பயமாக இருக்கும். அந்த காலத்தில் எல்லாம் கடன் வாங்கினாலே அது அவமானம் என்று இருந்தது ஆனால் இன்று கடன் இல்லாமல் இந்த உலகமே கிடையாது என்ற அளவிற்கு ஆகிவிட்டது. அனைத்து இடங்களிலுமே கடன் என்ற வார்த்

By ·

கடன் என்ற வார்த்தையை சொன்னாலே ஒரு சிலருக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கும் ஒரு சிலருக்கு பயமாக இருக்கும். அந்த காலத்தில் எல்லாம் கடன் வாங்கினாலே அது அவமானம் என்று இருந்தது ஆனால் இன்று கடன் இல்லாமல் இந்த உலகமே கிடையாது என்ற அளவிற்கு ஆகிவிட்டது. அனைத்து இடங்களிலுமே கடன் என்ற வார்த்தை இருந்து கொண்டே தான் இருக்கிறது சில்லறை வியாபாரத்திலிருந்து பெரிய வியாபாரம் வரையில் அனைத்திலுமே கடன் உள்ளது. சில சமயங்களில் நம்மிடம் அவசர தேவைக்காக கூட சிலர் கடன் வாங்குவார்கள் நாமும் கடன் கொடுத்திருப்போம் பிறரிடம் இருந்து கடனும் வாங்கி இருப்போம் தெரிந்த உறவுகள் நண்பர்கள் என யாராவது ஒருவர் கடன் கேட்டால் அதனை நாம் மனமிறங்கி கொடுத்து விடுவோம். ஆனால் அந்த கடனை மறுபடியும் அவர்களிடம் இருந்து வாங்குவது நமக்கு பெரும் பிரச்சனையாக அமைந்து விடும். கொடுத்த கடனை திரும்பவும் விரைவில் பெறுவதற்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருள் வெட்டிவேர். வெட்டிவேரை வாங்கி கொஞ்சம் பன்னீரில் ஊறவைத்து ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். பூஜை அறையில் மட்டும் இல்லாமல் தொழில் செய்யும் இடத்திலும் வெட்டிவேரை கிண்ணத்தில் போட்டு சுவாமி படத்திற்கு முன்பாக வைக்கலாம்.

வெட்டிவேருடன் பச்சை கற்பூரம்

அந்த கிண்ணத்தில் வெட்டிவேருடன் பச்சைக் கற்பூரத்தை தூள் செய்து போட்டு விட வேண்டும். தினமும் விளக்கு ஏற்றி வீட்டில் வழிபடும்போது ஊதுபத்தி ஏற்றி வெட்டிவேருக்கு காண்பிக்க வேண்டும் குலதெய்வத்தை மனதார நினைத்து கையில் அதிகமாக பணம் சேர வேண்டும் என்று கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் கொடுத்த கடன் மறுபடியும் வரவேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும் பிறகு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

மந்திரம்

ஓம் அனுகிரஹா தாராதேவி காரிய சித்தி தேவதா ஜெயவதா சகல காரிய சித்தியும் அனுகிரகம் குரு குரு ஸ்வாஹா!

என்ற மந்திரத்தை ஊதுபத்தி காட்டிக்கொண்டேன் உச்சரிக்க வேண்டும். மூன்று முறை மந்திரத்தை உச்சரித்து அதன் பிறகு உங்களுடைய அன்றாட வேலைகளை துவங்க வேண்டும்.48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்துவர நிச்சயமாக உங்களுடைய பணம் சீக்கிரத்திலேயே உங்கள் கைக்கு வந்து விடும். வெட்டிவேரின் வாசனை குறைந்த பிறகு அதனை யாருடைய கால்தடமும் படாத இடத்தில் போட்டு விட்டு புதிய வெட்டிவேரை மாற்றி வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் உங்கள் கைக்கு சுலபமாக வந்துவிடும்.

இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் அதிகமாக சில காரணங்கள்!

Recipes AMP · Quick view
View full