குடும்பதலைவரின் கையால் இந்த ஒரு பொருளை மறைந்து வையுங்கள் போதும் வறுமை என்பதே வராது!
யாருக்குத்தான் இல்லை குடும்ப கஷ்டம். எல்லோருக்கும் தான் குடும்பத்தில் கஷ்டம் இருக்கும். கஷ்டம் இருந்தால் தான் அது குடும்பம். உங்களுடைய குடும்பத்தில் தீராத கஷ்டம் இருக்கிறது, துன்பங்கள் துயரங்கள் தொடர் தோல்வி, புதிய முயற்சியில் தடை என்றால் முதலில் கஷ்டத்திற்கு என்ன காரணம் என்பதை க
யாருக்குத்தான் இல்லை குடும்ப கஷ்டம். எல்லோருக்கும் தான் குடும்பத்தில் கஷ்டம் இருக்கும். கஷ்டம் இருந்தால் தான் அது குடும்பம். உங்களுடைய குடும்பத்தில் தீராத கஷ்டம் இருக்கிறது, துன்பங்கள் துயரங்கள் தொடர் தோல்வி, புதிய முயற்சியில் தடை என்றால் முதலில் கஷ்டத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து அந்த கஷ்டத்தை சரி செய்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் முதல் வழி. இதோடு சேர்த்து இதற்கு ஒரு வழிபாட்டையும் செய்யலாம்.
வாழ்க்கையில் கஷ்டம் என்பது அனைவருக்கும் வரும். உலகில் யாருக்கும் கஷ்டம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஏன் அந்த கடவுளுக்கும் கஷ்டகள் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும். ஆகையால் கசடங்கள் இல்லையென்றால் வாழ்க்கையே வெறுத்து போய்விடும். சரி கஷ்டங்களிருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என தெரிந்து கொள்ளலாம்.
கஷ்டம் தீர குடும்ப தலைவர் கையால் செய்ய வேண்டிய பரிகாரம்
தனம் என்றால் செல்வம், பணம் என்பதை குறிக்கிறது. அது போல தானியம் என்றால் சமைக்கக்கூடிய அத்தனை பொருட்களையும் சேர்த்து தான் அவை குறிப்பிடப்படுகிறது. செல்வ வளமும், குறைவில்லா உணவும் கிடைக்க ஒரு மனிதன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அள்ள அள்ள குறையாத அன்னத்தை வாரி வழங்கும் அன்னபூரணியை வணங்கி விட்டு சமையல் செய்பவர்களுக்கு குறைவில்லாத தன, தானியம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே அன்னபூரணியை நினைத்து குடும்ப தலைவர் பரிகாரத்தை செய்தால் வீட்டில் தானியங்களுக்கு என்றும் பஞ்சமே வராது.
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு அகண்ட பாத்திரத்தில் பச்சரிசி எடுத்து பூஜையறையில் வைத்து விடுங்கள். குடும்பத் தலைவர் தன் கையால், தனது பெயரை மூன்று முறை சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்த அரிசியினுள் புதைத்து வைக்க வேண்டும். குடும்ப தலைவர் இதனை செய்து முடித்தபின் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதேபோல் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அரிசியினுள் புதைத்து வைக்க வேண்டும்.
இப்படி தயார் செய்த அந்த பச்சரிசி கிண்ணத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து தினமும் வழிபாடு செய்து வர அவர்கள் வீட்டில் தன தானியத்திற்கு பஞ்சம் வராது என்று சொல்லப்பட்டுள்ளது. தினமும் பூஜை அறையில் இருக்கும் இந்த பச்சரிசி பாத்திரத்திற்கு முன்னால் தீபம் ஏற்றி, ஊதுபத்தி வைத்து, சாம்பிராணி தூபம் போட்டு, எங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த பச்சரிசி பாத்திரத்தை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றலாம், அல்லது உங்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது மாற்றலாம். இதனை மாற்றும் பொழுது இதனில் இருக்கும் அரிசியை குருவிகளுக்கு காக்கைகளுக்கோ உணவாக வைத்து விடுங்கள். வெள்ளிக் கிழமைகளில் பால் நிவேதனம் செய்து வெள்ளை மலர் கொண்டு அன்ன பூரணியை வழிபட்டு வார வேண்டும். இந்த பரிகாரத்தை தவிர்த்து பூஜை அறையில் அன்னபூரணி சிலை சிறிதாக வாங்கி வைத்து அரிசி போட்டு வைப்பது செல்வத்தை கூட்டும் என நம்பப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்தால் போதும் உங்களுக்கு அந்த அன்ன தோஷம் இருந்தால் அது நீங்கி விடும். அதுமட்டுமல்லாமல் நிச்சயமாக உங்களுடைய வீட்டின் நிதி நிலைமையில் நல்ல மாற்றம் தெரியும்.