அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து இந்த ராசிக்கார்கள் மணி பர்ஸ் நிரம்பி வழிய போகிறது ரெடியாக இருங்கள்!

- Advertisement -

வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெற்று விட்டாலும் திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் 30-ஆம் தேதி தான் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. அப்படி ராகு கேது பெயர்ச்சி போது மற்ற ராசிகளில் மாற்றம் நிகழும். அப்படி எந்த ராசிகளுக்கு நன்மையான பலன்கள் கிடைக்க இருக்கிறது என்பதை பார்க்க இருக்கிறோம். நிழல் கிரகமாகிய இவைகள் பின்னோக்கி இடம்பெயர்ச்சி ஆகுவார்கள். அப்படி மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகுவும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சியால் துலாம்,விருச்சகம் , தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு எந்த மாதிரியான பலன்களை கொடுக்க இருக்கிறது  என்று பார்க்கலாம். இந்த ராகு கேது பெயர்ச்சியால் ராசிகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தெரிந்துகொள்ள இருக்கிறோம். ராகுவும் கேதுவும் கர்மவினைகளுக்கு பலன்களை கொடுக்கக் கூடியவர்கள். நம் முன்னோர்களின் வழி நின்று அவர்கள் செய்த கர்மத்திற்கெல்லாம் எவ்வாறு பலன்கள் கிடைக்கும் அதை எல்லாம் நமக்கு கொடுக்கக்கூடியவர்கள் இவர்களே.

-விளம்பரம்-

கர்மத்தின் பயனை அனுபவித்தால் மட்டுமே அதற்கு பிறகு வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும். ஆகையால் இந்த கர்மத்தின் பயனை நாம் இன்று அனுபவித்தாக வேண்டும் . அதற்கு நமக்கு ராகு கேதுவும் உதவுகிறார்கள். முன் ஜென்மத்தின் கர்மவினைகளை அனுபவிக்காமல் நம்மை வாழ்வினை கடந்தோம் என்றால் அக்கர்ம வினையை அனுபவிப்பதற்காகவே நாம் அடுத்தடுத்த ஜென்மங்கள் எடுக்க வேண்டி இருக்கும் . அப்படி அடுத்தடுத்த பிறவிகள் எடுக்காமல் இருப்பதற்கு இப்போதே கர்மத்தின் பலன்களை அனுபவித்து விடுவோம். இந்த  ஜென்மங்களிலேயே அதன் பலன்களை அனுபவித்து முடித்து விட வேண்டும் இல்லையென்றால் பிறகு அவை தொடர்ந்து கொண்டே இருக்கும் . ஆகையால் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் துணிவோடு நின்று எதிர்த்துப் போரிட்டு வெற்றியை நமதாக்கிக் கொள்வதே நாம் வாழ்வில் மகிழ்ச்சி அடைவதற்கு ஒரே வழி. இந்த ராகு கேது பெயர்ச்சி எந்த மாதிரியான அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களே  இந்த ராகு , கேது பெயர்ச்சியில் கடன், போட்டி, பொறாமை, நோய், வைத்திய செலவு ஸ்தானத்தில் வருவதால் கடன் அடைபடும் தீராத நோய் தீரும். படித்து முடித்து வேலை பார்த்து தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மோட்சானத்தில் மோட்ச கரகனாகிர் ஆகு வருவதால் புதிய முயற்சிகள் கைகூடும். வரவுக்கு மீறி இருந்த செலவுகள் எல்லாம் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். சுப செலவுகளுக்காக கடன் பட நேரிடும். நினைத்த காரியம் நிறைவேறும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகம் செல்வாக்கை கொடுக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்த ராகு கேது பெயர்ச்சியானது பண வருமானத்தோடு, ஞானத்தையும், அறிவையும், செல்வ வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்க இருக்கிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தொட்டதை துவங்க வைக்க இருக்கிறது . நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்க இருக்கிறது. குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியும் கொடுக்க இருக்கிறது. புதிய முயற்சிகள் யாவும் உங்களுக்கு நன்மையை தரக்கூடியதாக இருக்கும். இதுவரை தடைபட்ட காரியங்களெல்லாம் வெற்றியாகும். விவாகரத்தானவர்களுக்கெல்லாம் மறுமணம் நடைபெறுவதற்காண  வாய்ப்புகள் கூடிவரும். இதுவரை தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடியும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனைகள் ஏற்பட இருக்கின்றது. புதிய சொத்துக்கள் வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் அமைய இருக்கின்றன. தொழில் நிலை யோகத்தையும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் கொடுக்க இருக்கின்றது. இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தையும் திடீர் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

தனுசு

பத்தில் ஒரு பாவி இருந்தால் பதவியோகம் தேடி வரும் என்பார்கள்.இதுவரை தடைபட்ட காரியங்கள் தானே கூடி வரும். ராகுவால் வீடு வாகனம் வாங்குவதற்கு வழி வகைகள் ஏற்படும். தொட்டது துலங்கும். கைநிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு தொழில் மாற்றம் வேலையில் மாற்றம் போன்றவை கிடைக்கும். கேது யோகக்காரனாக இருந்து யோகங்களை வாரி வழங்க இருக்கிறார். நல்லவர்களின் ஆதரவு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில்கள் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். யோக வசதியும் கிடைக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிகளுக்கு மிகவும் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது.

-விளம்பரம்-

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு  தலை நிமிர்ந்தீ வாழ வழி கிடைக்க இருக்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் யோகமும் அதிர்ஷ்டமும் கிடைக்க இருக்கிறது. மோட்சத்தை கொடுக்கக்கூடிய ராகு பகவான் உங்களுக்கு ஒன்பதாவது வீட்டில் வருவதால் உங்களுக்கு இந்த காலம் பொற்காலமாகவே இருக்கும். நீண்ட கால கனவுகள் எல்லாம் நிறைவேறும்.யாரிடமெல்லாம் சென்று உதவிகள் கேட்டீர்களோ அவர்களே உங்களை தேடி வந்து உதவி செய்வதற்கான வழி வகைகள் ஏற்படும். இனி வரும் பிரச்சனைகளை எல்லாம் ராகுவும் கேதுவும் கவனித்து உங்கள் வாழ்க்கையில் நல்ல வழிகளை அமைத்து கொடுக்க இருக்கிறார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காத்திருப்புகளை எல்லாம் உடைத்து தேவையானவற்றை தடை இன்றி கொடுக்க இருக்கின்றது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு அந்த வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் கை கூடி வரும். நிலம் வாங்குவதற்கான சுப விரய செலவுகள் ஏற்படும் யாரோ பட்ட கடனுக்காக நீங்களும் பொறுப்பேற்று அந்த கடனை அடைக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பூர்வீகத்தில் சொத்து பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எதிலும் நிதானமாகவும் அமைதியாகவும் பேசுவது நன்மையை கொடுக்கும். கேது பகவான் போட்டி பொறாமைகளை அழிப்பார். ஜென்ம சனியால் ஏற்பட்ட சங்கடங்களை இந்த ராகு கேது பெயர்ச்சி நீக்க உதவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். சகோதர சகோதரிகளால் அனுகூல பலன்கள் கிடைக்கும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும். சிலருக்கு தன் மனைவியின் பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் அல்லது வேலையில் இடமாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தடைப்பட்ட திருமணம் கைகூடும். உயர் பதவிகள் உயர் படிப்புகளால் உங்களுக்கு நல்ல வேலையை கிடைக்கும்.ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் என்பது போல எந்த ஒரு செயல் செய்தாலும் அந்த செயலை தீர்க்கமாகவும் சிந்தித்தும் செயல்படுவது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாடு குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

-விளம்பரம்-