கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதற்கு செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம்!!

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலைகள் மற்றவர்களிடமிருந்து பணத்தை கடனாக வாங்கி இருப்போம். அதேபோல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பண உதவி செய்திருப்போம். பண உதவி என்பது கடனாகவும் கொடுத்திருக்கலாம் அல்லது தங்களால் இயலும் பட்சத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பி தரலாம் வட்ட

By ·

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலைகள் மற்றவர்களிடமிருந்து பணத்தை கடனாக வாங்கி இருப்போம். அதேபோல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பண உதவி செய்திருப்போம். பண உதவி என்பது கடனாகவும் கொடுத்திருக்கலாம் அல்லது தங்களால் இயலும் பட்சத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பி தரலாம் வட்டியதும் தேவையில்லை என்று கூறியும் கொடுத்திருக்கலாம். அப்படி நம் கையில் இருந்து பிறருக்கு போன பணம் திரும்பவும் நம் கைக்கு வராமல் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள் வெற்றிலையை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

கடனாக கொடுத்த பணம்

யாராவது ஒருவர் கஷ்டப்படும் சூழ்நிலைகள் நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தை அவருக்கு உதவியாகவோ அல்லது கடனாகவோ கொடுத்திருப்போம். அப்படி கொடுத்த அந்த பணம் நம் கைக்கு திரும்ப வராமல் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கும் அவர்களால் திரும்ப தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அந்த பணத்தை அவர்கள் நமக்கு திரும்ப தராமல் ஏமாற்றம் நினைத்தாலும் நினைக்கலாம் இதனால் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும் அதனை தீர்ப்பதற்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

இந்த பரிகாரத்திற்கு நமக்கு சுத்தமான பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய கிழியாத நிலையில் இருக்கக்கூடிய வெற்றிலை தேவைப்படும். வெற்றிலையை தண்ணீர் கொண்டு ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும் பிறகு உங்களுடைய சுண்டு விரலை பயன்படுத்தி நெய்யை எடுத்து வெற்றிலையின் மீது தடவ வேண்டும். இதற்கு நமக்கு ஐந்து வெற்றிலைகள் தேவைப்படும் ஒவ்வொரு வெற்றிலையின் மேலும் மெய் தடவி ஐந்து வெற்றிலைகளையும் அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து ஒரு நூல் கொண்டு பெற்றுள்ளையை சுருட்டி கட்டிக் கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

சுருட்டிய வெற்றிலைகளை பூஜையறை அல்லது பணம் இருக்கக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும். முழு மனதோடு வரவேண்டிய பணம் தடையில்லாமல் வரவேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வெற்றிலையை அந்த இடத்தில் வைக்க வேண்டும். ஐந்து நாட்களுக்குப் பிறகு ஐந்து ரூபாய் எடுத்து தனியாக வைத்துக்கொண்டு வெற்றிலைகளை யாருடைய கால்தனமும் படாத இடத்தில் போட வேண்டும். இந்த பரிகாரத்தை ஒவ்வொரு புதன் கிழமையும் தொடர்ச்சியாக 5 வாரங்கள் செய்து வர வேண்டும். புதன்கிழமை அன்று புதன் ஹோரை நேரத்தில் காலை 6 மணியிலிருந்து ஏழு மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஏதாவது ஒரு நேரத்தில் செய்ய வேண்டும்.

இதனையும் படியுங்கள் : பணம் அதிகமாக சேர எழுத வேண்டிய வார்த்தை!

Recipes AMP · Quick view
View full