வீட்டில் பல மடங்கு பணம் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு பலவிதமான பரிகாரங்களை செய்திருப்போம். அந்த வகையில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். பணம் பல மடங்கு பெருகும் அதோடு தன்னம்பிக்கையின் விடாமுயற்சியும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் உங்கள் மனதில் பதியும். இந்த பரிகாரத்தை வீட்டில் செய்வதன் மூலம் பணம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும். இந்த எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

எழுத வேண்டிய வார்த்தை
அல்ல அல்ல குறையாமல் கொடுக்கக்கூடிய பாத்திரத்தை அட்சய பாத்திரம் என்று கூறுவார்கள். அதனால் அட்சயம் என்ற வார்த்தைக்கு நிறைய சக்திகள் உள்ளது ஒரு பொருளை பல மடங்காக பெருக்கிக் கொடுக்கக் கூடிய சக்தி இந்த வார்த்தைக்கு உள்ளது எனவே பணம் வைக்கக்கூடிய பெட்டியில் ஒரு வெள்ளை நிற காகிதத்தில் இந்த வார்த்தையை எழுதி அப்படியே பணம் வைக்கக்கூடிய பெட்டியில் வைத்து விட வேண்டும். மடித்து வைக்கக் கூடாது.
சந்தனத்தால் எழுத வேண்டிய வார்த்தை
இதே வார்த்தையை பணம் வைக்கக்கூடிய பெட்டியில் சந்தனத்தை பன்னீர் ஊற்றி கலந்து மோதிர விரலால் தொட்டு அட்சயம் என்ற வார்த்தையை எழுதிக் கொள்ள வேண்டும். ஒரு காகிதத்தில் எழுதியும் வைக்கலாம் இல்லையென்றால் இப்படியும் எழுதலாம்.
வார்த்தையை எழுதி வைக்க வேண்டிய இடம்
இந்த வார்த்தையை பணம் வைக்கும் பெட்டியில் தான் வைக்க வேண்டுமா என்றால் கிடையாது. பூஜை அறை சமையல் அறை படிக்கின்ற இடம் என எதில் வேண்டுமானாலும் இந்த வார்த்தையை உங்கள் வசதிக்கு ஏற்ப எழுதிக் கொள்ளலாம். சமையல் அறையில் அடுப்புக்கு மேல் பக்கத்தில் இருக்கக்கூடிய சுவர் மீது இந்த வார்த்தையை எழுதி வைத்தால் சாப்பாட்டிற்கு பஞ்சம் இருக்காது. குழந்தைகள் படிக்கக்கூடிய இடத்தில் இதனை எழுதி வைத்தால் கல்வி செல்வம் நிறைவாக கிடைக்கும். அட்சயம் என்ற வார்த்தைக்கு நிறைய மதிப்பு இருப்பதால் இதனை எழுதி வைத்து பாருங்கள் நிச்சயமாக பணம் அதிகமாகவே கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீண் செலவு ஆகாமல் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும்!


