கனவன் மனைவி சண்டை சச்ரவுகள் குறைய ஏன் பிரிந்த தம்பதிகள் கூட ஒன்று சேர இந்து ஒரு பொருளை வைத்து தீபம் ஏற்றுங்கள் போதும்!
குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் பிரச்சினையாக இருக்கிறதா? கணவன், மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு ஒருவரை ஒருவர் முதலில் அமைதியான நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். சண்டையை தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவ
குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் பிரச்சினையாக இருக்கிறதா? கணவன், மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு ஒருவரை ஒருவர் முதலில் அமைதியான நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். சண்டையை தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் மனோதிடமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் அதைவிட்டு விட்டு கணவனும் மனைவியும் எலியும் பூனையுமாக சண்டை போடுகிறார்களா? தம்பதியர் ஒற்றுமை ஏற்படவும் அன்பும் காதலும் அதிகரிக்கவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். எளிதான இந்த பரிகாரங்களை வீட்டில் செய்தாலே போதும் எந்த ஒரு பிரச்சினையும் மாயமாகும். இறை வழிபாட்டுடன், மந்திர சக்தியும் ஒன்று சேர்வதால் விரைவில் கணவன் – மனைவி இடையேயான பிரச்சனைகள் தீர்ந்து, ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது.
கணவன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
ஒரு வீட்டில், மனைவி ஒற்றுமையுடனும் பொறுமையுடனும் கனிவுடனும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தால், அந்தக் குடும்பத்தில் வேறு உறவுகளிடையே விரிசல் ஏற்பட்டாலும் கூட, அவற்றை சரிசெய்துவிடுவார்கள். பொதுவாக பெண்கள் தான் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டால் கோவில் கோவிலாகச் சென்று பரிகாரம் செய்து வழிபடுவார்கள். ஆனால் மனைவியே பொறுமை இல்லாமல் விட்டு சென்று விட்டால் கணவனும் பரிகாரங்கள் செய்யலாம்.
கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் கருத்து வேற்றுமைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, சுக்கிர ஹோரையில் ஆலமரத்தடியில் இருக்கும் பின்னிய நாகத்திற்கு பால், மஞ்சள் மற்றும் குங்குமம் வாங்கி அபிஷேகம் செய்யலாம். பின்னர் தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த வழிபாட்டை பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில் செய்தால் சீக்கிரம் பலன் கிடைத்து விடும்.
வீட்டிலேயே வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு, வெள்ளை மொச்சையை சிறிதளவு ஒரு அகலில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட தன்னை புரிந்து கொள்ளாமல் சென்ற மனைவி விரைவிலேயே வந்து சேருவார். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். வீட்டில் சூழ்ந்திருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் மறைந்து, தெய்வ ஆற்றல் பரவ துவங்கும். கண் திருஷ்டி போன்றவைகளும் இதனால் விலகி விடும்.
மனைவி செய்ய வேண்டிய பரிகாரங்கள்
இல்லறம் நல்லறமாக சிறக்க கணவன் மனைவி ஒற்றுமை என்பது மிகவும் அவசியமாகும். பல வீடுகளில் வெளிஉலகிற்காக ஒரே வீட்டில் வாழ்பவர்கள் இருக்கிறார். பல ஆண்கள் சிறிய பிரச்சனைக்கு கூட சகிப்பு தன்மை இல்லாததால் கோபம் கொண்டு பிரிய வேண்டும் என முடிவு எடுத்துவிடுவார்கள். தன்னை விட்டு சென்ற கணவன் மீண்டும் வந்து சேர மனைவிமார்கள் அரசமரத்தடியில் இருக்கும் பின்னணி நாகத்திற்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை மிருகசிரீஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரம் இணைந்தவாறு வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் செய்தால் உடனடி பலன் பெறலாம். இந்த வழிபாட்டின் மூலம் தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் நிம்மதி பரவும். பிரிந்த தம்பதிகள் விரைவில் ஒன்று சேருவார்கள்.
பெண்கள் தங்கள் இல்லங்களில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஹோரையில் ஒரு அகலில் துவரம் பருப்பை போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர பிரிந்து சென்ற கணவன் விரைவிலேயே மனம் மாறி வந்து சேருவார். துவரம் பருப்பிற்கு எதிர்மறை எண்ணங்களை மாற்றும் சக்தி உள்ளது. இப்படி தொடர்ந்து தீபம் ஏற்றி வந்தால் விரைவில் தம்பதி இடையே இருந்து வந்த பிணக்குகள் தீரும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். புரிந்துகொண்டு விட்டுக்கொடுப்பார்கள்.
இந்த பரிகாரம் மட்டுமல்லாமல் சிவ பார்வதியை மனதார வணங்கினால் நிச்சயம் நம்முடைய பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் நீங்கி, நம்முடைய அனைத்து வேண்டுகோள்களும் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
இதனையும் படியுங்கள் : உங்கள் எதிரிகள் என்ன செய்தாலும் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமா ? சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம்!!