வெயிலுக்கு குளு குளுனு குடிக்க சுவையான பிஸ்தா பிர்னி ஒரு தரம் இப்படி வீட்டிலயே எளிமையாக செஞ்சி பாருங்கள்!
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ்கிரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து க
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ்கிரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து கொடத்தலும் அனைத்தும் அடுத்த நிமிடமே காலி ஆகிவிடும். குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் பிர்னி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த பிஸ்தா பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும்.
பிஸ்தா பிர்னி என்பது அரிசி புட்டு மற்றும் பிஸ்தா பருப்பினால் செய்யப்படும் ஒரு சுவையான இந்திய இனிப்பு ஆகும். இது அரிசி நன்கு அரைக்கப்பட்டு, பால், குங்குமப்பூ தூள் மற்றும் பல்வேறு பொருட்களுடன் சேர்த்து செய்யப்படுகிறது. பிஸ்தா பருப்பை அப்படியேவும் சாப்பிடலாம். அல்லது இதுபோன்று ஜூஸ் செய்து சாப்பிடலாம். இஸ்லாமியர்கள் சமையல் கலையில் பிர்னி ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஆகும். இது மிகவும் சுவையாகவும் சத்தும் நிறைந்ததாகும். வட இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், திருமணங்கள், பண்டிகைகள் அல்லது எந்த சிறப்பு கொண்டாட்டங்களிலும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. பிஸ்தா பருப்புகளைக் கொண்டு செய்யப்படும் இந்த பிர்னியை நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக இந்த பிஸ்தா பிர்னியை வீட்டிலேயே தயார் செய்து, அவர்கள் எதிர்பார்க்காத போது அவர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி அளிக்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் நிறைய பிஸ்தா இருந்தா இந்த மாதிரி பிஸ்தா குல்பி செஞ்சு பாருங்க! இனி வரும் வெயில் காலத்திற்கு குளுகுளுனு இருக்கும்!