வெயிலுக்கு குளு குளுனு குடிக்க சுவையான பிஸ்தா பிர்னி ஒரு தரம் இப்படி வீட்டிலயே எளிமையாக செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ்கிரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து கொடத்தலும் அனைத்தும் அடுத்த நிமிடமே காலி ஆகிவிடும். குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் பிர்னி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த பிஸ்தா பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும்.

-விளம்பரம்-

பிஸ்தா பிர்னி என்பது அரிசி புட்டு மற்றும் பிஸ்தா பருப்பினால் செய்யப்படும் ஒரு சுவையான இந்திய இனிப்பு ஆகும். இது அரிசி நன்கு அரைக்கப்பட்டு, பால், குங்குமப்பூ தூள் மற்றும் பல்வேறு பொருட்களுடன் சேர்த்து செய்யப்படுகிறது. பிஸ்தா பருப்பை அப்படியேவும் சாப்பிடலாம். அல்லது இதுபோன்று ஜூஸ் செய்து சாப்பிடலாம். இஸ்லாமியர்கள் சமையல் கலையில் பிர்னி ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஆகும். இது மிகவும் சுவையாகவும் சத்தும் நிறைந்ததாகும். வட இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், திருமணங்கள், பண்டிகைகள் அல்லது எந்த சிறப்பு கொண்டாட்டங்களிலும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. பிஸ்தா பருப்புகளைக் கொண்டு செய்யப்படும் இந்த பிர்னியை நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக இந்த பிஸ்தா பிர்னியை வீட்டிலேயே தயார் செய்து, அவர்கள் எதிர்பார்க்காத போது அவர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி அளிக்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

பிஸ்தா பிர்னி | Pista Phirni Recipe In Tamil

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ்கிரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து கொடத்தலும் அனைத்தும் அடுத்த நிமிடமே காலி ஆகிவிடும். குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் பிர்னி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த பிஸ்தா பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Pista Phirni
Yield: 4 People
Calories: 168kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 லி பால்
  • 1/4 கப் பாசுமதி அரிசி
  • 3 டேபிள் ஸ்பூன் பிஸ்தா
  • 1/2 டீஸ்பூன் பிஸ்தா எசன்ஸ்
  • 1/4 கப் கன்டென்ஸ்டு மில்க்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் குங்குமப் பூ
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அரை மணி நேரம் கழித்து அரிசியை ஒரு துணி விரித்து நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் காய்ந்த அரிசியை ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து விடாமல், ரவை பதத்திற்க்கு அரைத்து தனியே வைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
  • பிஸ்தா பருப்பை ஒரு‌ கடாயில் சேர்த்து வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன்‌பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பால் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும். பால் கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • சிறிது நேரம் கழித்து பால் நன்கு கெட்டியானதும் அரைத்து வைத்த பிஸ்தா, பிஸ்தா எசன்ஸ், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் மற்றும் குங்குமப் பூ சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இது சிறிது கெட்டியானதும் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இது நன்கு ஆறியவுடன் சின்ன கப்பிற்கு மாற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.
  • இது நன்கு செட் ஆனதும் வெளியே எடுத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பிஸ்தா பிர்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 168kcal | Carbohydrates: 8g | Protein: 8.5g | Fat: 13g | Saturated Fat: 1.5g | Sodium: 120mg | Potassium: 290mg | Fiber: 3g | Sugar: 2g | Vitamin A: 6.1IU | Vitamin C: 146mg | Calcium: 30mg | Iron: 4.1mg

இதனையும் படியுங்கள் : வீட்டில் நிறைய பிஸ்தா இருந்தா இந்த மாதிரி பிஸ்தா குல்பி செஞ்சு பாருங்க! இனி வரும் வெயில் காலத்திற்கு குளுகுளுனு இருக்கும்!