Advertisement
சட்னி

சுவையான பூண்டு தேங்காய் சட்னி செய்வது எப்படி ?

Advertisement

நாம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால்

இதையும் படியுங்கள் : சுவையான முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி ?

Advertisement

கண்டிப்பாக இந்த பூண்டு தேங்காய் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த பூண்டு தேங்காய் சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த பூண்டு தேங்காய் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பூண்டு தேங்காய் சட்னி | Poondu Coconut Chutney Recipe in Tamil

Print Recipe
ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பூண்டு தேங்காய் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த பூண்டு தேங்காய் சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும்
Advertisement
உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 5 people
Calories 73

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
    Advertisement

Ingredients

  • 2 கப் துருவிய தேங்காய்
  • 2 tbsp பொரிகடலை
  • 8 வர மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 2 tbsp எண்ணய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிரை

Instructions

  • முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் 2 கப் துருவிய தேங்காய், 8 வரமிளகாய், 8 பூண்டு, 2 டீஸ்பூன் பொரிகடலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இந்த மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உப்பு சேர்த்து பின் அரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு மிக்ஸியில் அரைத்த பொருட்களை ஒரு பெரிய பவுளில் சேர்த்து பின் கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்த பருப்பு இரண்டு வர மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பின் தாளித்த தாளிப்பை பவுளில் உள்ள சட்னியுடன் சேர்த்து கொள்ளுங்கள. அவ்வளவு தான் சுவையான பூண்டு தேங்காய் சட்னி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 73kcal | Carbohydrates: 34g | Protein: 9g | Fat: 1g | Saturated Fat: 1.2g | Sodium: 5mg | Potassium: 169mg | Fiber: 6g | Sugar: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

55 நிமிடங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

2 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

4 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

8 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

17 மணி நேரங்கள் ago