சுவையான பூண்டு தேங்காய் சட்னி செய்வது எப்படி ?

- Advertisement -

நாம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : சுவையான முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி ?

- Advertisement -

கண்டிப்பாக இந்த பூண்டு தேங்காய் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த பூண்டு தேங்காய் சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த பூண்டு தேங்காய் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

பூண்டு தேங்காய் சட்னி | Poondu Coconut Chutney Recipe in Tamil

ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பூண்டு தேங்காய் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த பூண்டு தேங்காய் சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: chutney, சட்னி
Yield: 5 people
Calories: 73kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் துருவிய தேங்காய்
  • 2 tbsp பொரிகடலை
  • 8 வர மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 2 tbsp எண்ணய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிரை

செய்முறை

  • முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் 2 கப் துருவிய தேங்காய், 8 வரமிளகாய், 8 பூண்டு, 2 டீஸ்பூன் பொரிகடலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இந்த மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உப்பு சேர்த்து பின் அரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு மிக்ஸியில் அரைத்த பொருட்களை ஒரு பெரிய பவுளில் சேர்த்து பின் கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்த பருப்பு இரண்டு வர மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பின் தாளித்த தாளிப்பை பவுளில் உள்ள சட்னியுடன் சேர்த்து கொள்ளுங்கள. அவ்வளவு தான் சுவையான பூண்டு தேங்காய் சட்னி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 73kcal | Carbohydrates: 34g | Protein: 9g | Fat: 1g | Saturated Fat: 1.2g | Sodium: 5mg | Potassium: 169mg | Fiber: 6g | Sugar: 2g

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here